Connect with us

latest news

ரூல்ஸ் எல்லாம் மாறப்போகுது… இனி மெசேஜ் மட்டும் தான்… மின்சார வாரியம் சொன்ன குட் நியூஸ்…!

Published

on

தமிழக மின்சார வாரியம் தற்போது மக்களுக்கு நற்செய்தி ஒன்றை கூறியிருக்கின்றது.

பொதுவாக தமிழகத்தில் கோடை நாட்களில் மின்தடைகள் ஏற்படுவது வழக்கம்தான். இதனால் மக்கள் இரவு நேரங்களில் தூக்கம் இல்லாமல் மிகுந்த அவதிப்படுவார்கள். நள்ளிரவு நேரத்தில் மாற்றி மாற்றி மின்வாரியத்திற்கு போன் செய்து வருவார்கள். இந்த முறை கோடை காலத்தில் இப்படியான மின்தடைகள் ஏற்பட்டதையும், மக்கள் மின் அலுவலக வாயிலில் போராட்டம் செய்ததையும் நாம் பார்த்தோம்.

ஆனால் கடந்த காலங்களை ஒப்பிடும்போது இந்த முறை அந்த அளவுக்கு பெரிதாக மின்தடை ஏற்படவில்லை என்று கூறுகிறார்கள். மின்தடை ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், மின்சப்ளையில் பழுதுகள் ஏற்பட்டாலும் அதனை உடனடியாக சரி செய்வதற்காக சிறப்பு குழு அமைக்கப்பட்டதாகவும் மின்சார வாரியம் தெரிவித்திருந்தது.

இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தலைமைச் செயலாளர் சிவதாஸ் குப்தா கூறியிருநததாவது “மின்சார விநியோக பாதையில் இருக்கும் மின் மாற்றுகள், புதைவட கம்பிகள் மற்றும் மின் கம்பிகளில் அடிக்கடி பழுதுகள் ஏற்படுவதன் காரணமாக மின்தடைகள் உடனுக்குடன் சரி செய்யப்பட்டு வருகின்றது. இதனால் சீரான மின்சாரம் வழங்கப்படுகின்றது. இரவு நேரங்களில் ஏற்படும் பழுதுகளை சரி செய்வதற்கு 60 சிறப்பு நிலை குழுக்கள் அமைக்கப்பட்டு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று அவர் தெரிவித்திருந்தார்.

 

அதைத்தொடர்ந்து புதிய அறிவிப்பும் வெளியாகி உள்ளது. அதாவது இனிமேல் மின்தடை, மின் மீட்டர் பழுது என எந்தவித புகாராக இருந்தாலும் அதை மெசேஜ் மூலமாக மக்கள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா சாலையில் இதற்காக மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் நுகர்வோர் சேவை மையம் செயல்பட்டு வருகின்றது.

இங்கு 9498794987 என்ற செல்போன் எண்ணில் மின்தடையோ அல்லது மின்மீட்டர் பழுது ஏற்பட்டாலோ அதனை மெசேஜ் மூலமாக புகாராக தெரிவிக்கலாம். இதில் அளிக்கப்படும் புகார்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டதும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொதுமக்கள் புகார் அளிக்கும் போது மின் இணைப்பு எண் பதிவு செய்த செல்போன் நம்பரை தெரிவித்தால் போதும் உடனே அதற்கான தீர்வு காணப்படும் என்று கூறியிருக்கிறார்கள்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *