Connect with us

tech news

CMF பிரான்ட் அம்பாசிடர் ஆன ராஷ்மிகா மந்தனா

Published

on

நத்திங் நிறுவனம் தனது CMF பிரான்ட் பொருட்களை இந்தியாவில் விளம்பரப்படுத்த ராஷ்மிகா மந்தனாவுடன் கைகோர்த்துள்ளது. முன்னதாக நத்திங் ஸ்மார்ட்போன்களை விளம்பரப்படுத்த அந்நிறுவனம் ரன்வீர் சிங் உடன் கைகோர்த்தது குறிப்பிடத்தக்கது.

பிரான்ட் அம்பாசிடர் என்ற அடிப்படையில், ராஷ்மிகா மந்தனா CMF சாதனங்களை டிஜிட்டல், அச்சு ஊடகம் மற்றும் தொலைகாட்சி விளம்பரங்கள் மூலம் விளம்பரப்படுத்துவார். இதுதவிர CMF பிரான்ட் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் CMF போன் 1 அம்சங்களையும் அறிவித்து இருக்கிறது.

அதன்படி CMF போன் 1 மாடலில் பயனர்கள் கழற்றி மாற்றிக் கொள்ளக்கூடிய பேக் கவர்கள் நான்கு நிறங்களில் வழங்கப்படும். முதற்கட்டமாக CMF போன் 1 மாடலின் பேக் கவர்கள் பிளாக், ஆரஞ்சு, லைட் கிரீன் மற்றும் புளூ உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும்.

இவற்றில் பிளாக் மற்றும் லைட் கிரீன் போனின் கேஸ் உடனேயே டெக்ஸ்ச்சர் வடிவில் நேரடியாக பொருத்தப்பட்டு இருக்கும். புளூ மற்றும் ஆரஞ்சு நிறங்கள் அழகிய வீகன் லெதர் லேயர் பேக் கேஸ்-இன் மேல் வைக்கப்பட்டு இருக்கும் என்று CMF அறிவித்து இருக்கிறது.

இத்துடன் ஸ்மார்ட்போனின் பின்புற கேஸ் உடன் கழற்றி மாற்றிக் கொள்ளக்கூடிய அக்சஸரீக்கள் வழங்கப்பட உள்ளன. இதில் கனெக்டர், ஸ்டாண்ட் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

முந்தைய டீசர்களில் CMF போன் 1 மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 7300 பிராசஸர், அதிகபட்சம் 8GB ரேம் வழங்கப்படும் என்றும் இதில் 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படும் என்று தெரிவித்து இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் ஜூலை 8 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

google news