Connect with us

latest news

பஸ் கண்டக்டர்களுக்கு பரிசு… இத செஞ்சா மட்டும் போதும்… போக்குவரத்துதுறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!

Published

on

யுபிஐ செயலி மூலமாக அதிக டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் பேருந்து நடத்துனர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் பயணச்சீட்டு வழங்கும் வசதியை கொண்டு வந்திருக்கிறார்கள். இதன் மூலமாக அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் தங்களது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலமாக பணம் செலுத்தி பயன்டிகடுகளை பெற்றுக் கொள்ளலாம்.

தற்போது குறிப்பிட பேருந்துகளில் அதாவது அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இந்த வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் பயணம் செய்யும் பயணிகள் தங்களது கூகுள் பே, போன் பே மற்றும் யுபிஐ-யை போன்றவற்றின் மூலமாக பணம் செலுத்தி பயண சீட்டுகளை பெற்றுக் கொள்ள முடியும். இந்த முறையை பயணிகளிடம் ஊக்குவிக்கும் விதமாக போக்குவரத்து கழகம் சார்பாக ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதில் “அரசு பேருந்துகளில் ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாக மின்னணு பரிவர்த்தனை எண்ணிக்கை மூலம் பயணிகளுக்கு பயண சீட்டு வழங்கும் நடத்துனர்களுக்கு பரிசு தொகையும் அத்துடன் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளிடம் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நடத்துனர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என்று வெளியான இந்த அறிவிப்பு நடத்துனர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

google news
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

latest news

புரட்டாசி சனிக்கிழமை…பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்…

Published

on

தினசரி கோவில்களுக்கு செல்லும் பழக்கம் பலரிடம் இருந்து வந்தாலும், முக்கிய நாட்கள், பண்டிகை தினங்கள் அன்று இறை வழிபாட்டிற்கு முக்கியத்துவதும் அளித்து அன்றைய தினத்தில் சாமி தரிசெய்து தங்களது பிரார்த்தனைகளை வைத்தும், நேர்த்திக் கடகளை செலுத்தி வருபவர்களும் இருந்து வருகிறார்கள்.

தமிழ மாதங்களில் சில குறிப்பிட்ட சில தெய்வங்களை வணங்கும் மாதங்களாகவும் இருந்து வருகிறது. ஆடி மாதம் என்றால் அம்மன் கோவில்களில் அதிகமான பக்தர்கள் காணப்படுவார்கள். அம்மாதத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் வழிபாடு அதிக முக்கியத்துவம் பெறுபவைகளாக அமைந்து வருகிறது.

அதிலும் பெண்கள் அதிகமானோர் ஆடி மாதத்தின் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை வழிபாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவார்கள்.

Lord Perumal

Lord Perumal

நவராத்திரி விரதம் பெரும்பாலும் புரட்டாசி மாதத்திலேயே வரும். இந்த நாட்களில் பகதர்கள்  மாலை அணிவித்து விரதமிருந்து தங்களது வேண்டுதல்களை முன்வைக்கவும், நேர்த்திக்கடன்களை நிறைவேற்றவும் கோவில்களுக்கு சென்று வந்த வண்ணம் இருப்பர்.

அதே போல இந்த குறிப்பிட்ட புரட்டாசி மாதம் பெருமாளை வழிபட உகந்த மாதமாகவும் கருதப்படுகிறது. அதிலும் இந்த மாதத்தில் சனிக்கிழமை அதிக பிரசித்தி பெற்ற நாளாக இருக்கிறது பெருமாளை வழிபட நினைப்பவர்களுக்கு.

புரட்டாசி மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமையான இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருக்கும் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதே போல மார்கழி மாத்ததிலும் பெருமாளை வழிபடுவது அதிகம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.

புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையான இன்று தமிழகத்தில் அமைந்திருக்கும் முக்கிய பெருமாள் கோவில்களில் பக்தர்கள் அதிகாலை முதலே வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

google news
Continue Reading

latest news

இந்த நாலு மாவட்டத்துக்கு கன மழை…வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ள எச்சரிக்கை…

Published

on

Rain

தமிழகத்தில் வட-கிழக்கு பருவ மழை விரைவில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் லேசானது வரையிலான மழை அவ்வப்போது பெய்து வருகிறது.

குமரிக் கடல் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளைச் சார்ந்த மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியிருந்தது.

RainFall

RainFall

இந்நிலையில் தமிழகம், பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான மழை குறித்த முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது வானிலை ஆய்வு மையம்.

அதன்படி தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று  மிகக் கனமழை பெய்யக்கூடும் எனவும், சில இடங்களில் கனமழை முதல் மிதமானது வரையிலான மற்றும் லேசானது வரையிலான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையத்தின் ஆய்வு அறிக்கை சொல்லியிருக்கிறது.

இதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதே போல தமிழகத்தின் இதர மாவட்டங்களில் திண்டுக்கல், தேனி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையத்தின் ஆய்வு அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

வெப்ப சலனத்தின் காரணமாக சென்னையின் சுற்று வட்டாரப்பகுதிகளில் இன்று லேசான மழை பெய்தது. இதனால சென்னையின் ஒரு சில இடங்களில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

google news
Continue Reading

latest news

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்.. பதிவு செய்வது எப்படி?

Published

on

பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்தத் திட்டம் மூலம் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பிரச்சினைக்கு தீர்வு காண முடிவு செய்யப்பபட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தத் திட்டத்தின் கீழ் 1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

இந்த இன்டர்ன்ஷிப்கள் தலைசிறந்த பணியிட அனுபவத்தை வழங்கும் நோக்கில் வழங்கப்படுகின்றன. இதில் பங்கேற்கும் இளைஞர்கள் இந்தத் திட்டத்தை முடித்த பிறகு உடனடி வேலையில் சேர்வவதை எளிமையாக்குகிறது. தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள், பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தில் இருந்து பயனடைய அதிகாரப்பூர்வ வலைதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.

modi

இன்டர்ன்ஷிப் திட்டத்தில் பங்கேற்க கீழ்வரும் தகுதி இருப்பது அவசியம் ஆகும்..,

  • வயது வரம்பு: 21 முதல் 24 வயது வரை
  • முழுநேர வேலையில் ஈடுபடக் கூடாது
  • அரசு ஊழியர்களைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த தனிநபர்கள் தகுதியற்றவர்கள்
  • ஐஐடிகள், ஐஐஎம்கள் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களிலிருந்து பட்டதாரிகள் அல்லது CA அல்லது CMA போன்ற தகுதிகள் உள்ளவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் (ITIகள்) மற்றும் கௌஷல் கேந்திரா (திறன் மையங்கள்) ஆகியவற்றில் பயிற்சி பெற்ற இளைஞர்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெறலாம்.

இந்தத் திட்டத்தில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மாத உதவித்தொகையாக ரூ. 4,500-ஐ அரசிடமிருந்து பெற முடியும். இதோடு நிறுவனங்கள் சார்பில் கூடுதலாக ரூ. 500 வழங்கப்படுகிறது. இந்தத் தொகை சமூகப் பொறுப்பு (CSR) முன்முயற்சிகளின் ஒரு பகுதியாக வழங்கப்படும்.

மாதாந்திர உதவித்தொகை பெறுவது மட்டுமின்றி, விண்ணப்பதாரர்கள் திடீர் செலவுகளை ஈடுகட்ட ஒரு முறை மட்டும் ரூ. 6,000 நிதி உதவியைப் பெறலாம். பிரதமர் ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் பிரதமர் சுரக்ஷா பீமா யோஜனா போன்ற திட்டங்களின் கீழ் பயிற்சியாளர்கள் காப்பீடு செய்யப்படுவதையும் அரசாங்கம் உறுதி செய்யும். இதோடு, பிரீமியம் செலவுகளை அரசே ஏற்றுக் கொள்ளும்.

பதிவு செய்வது எப்படி?

  • அக்டோபர் 12 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 25 ஆம் தேதிக்குள் மத்திய அரசின் கார்ப்பரேட் விவகாரங்கள் துறைக்கான அமைச்சகத்தின் இணையதளத்தில் (www.pminternship) பதிவு செய்ய வேண்டும்.
  • இதைத் தொடர்ந்து விண்ணப்பித்தவர்களை தேர்வு செய்யும் பணி அக்டோபர் 27 ஆம் தேதி துவங்கி நவம்பர் 7 ஆம் தேதி வரை நடைபெறும். இதன் பிறகு நவம்பர் 8 ஆம் தேதியில் இருந்து 15 ஆம் தேதிக்குள் இன்டர்ன்ஷிப் திட்டத்தில் இணைவதற்கான கடிதம் வழங்கப்படும்.
  • இந்தத் திட்டத்தில் இணையும் முதற்கட்ட இன்டர்ன்கள் தங்களின் ஓராண்டு கால வேலைவாய்ப்பு பயிற்சியை டிசம்பர் 2 ஆம் தேதி முதல் துவங்குவர்.
google news
Continue Reading

latest news

ஆன்லைனில் பாஸ்போர்ட் சேவைகளை இயக்குவதில் புது சிக்கல்.. காரணம் இதுதான்

Published

on

இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க பாஸ்போர்ட் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலமாக இந்தியர்கள் பாஸ்போர்ட் பெற்று வருகின்றனர். இதற்காக பாஸ்போர்ட் சேவாக்க் இயக்கப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதிலும் உள்ளவர்கள் புதிய பாஸ்போர்ட் பெறவும், ஏற்கனவே பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் அது சார்ந்த சேவைகளை பெற பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு நேரடியாக சென்றும், ஆன்லைனிலும் தங்களது தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும். இந்த நிலையில், பாஸ்போர்ட் சேவா ஆன்லைன் தளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், சில நாட்களுக்கு அதற்கான வலைதளம் இயங்காது என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதன்படி நேற்றிரவு (அக்டோபர் 4) 8 மணி துவங்கி அக்டோபர் 7 ஆம் தேதி காலை 6 மணி வரை பாஸ்போர்ட் சேவா வலைதள சேவைகள் பயன்பாட்டில் இருக்காது. இந்த தேதிகளில் பயனர்கள் பாஸ்போர்ட் விண்ணப்பம் சார்ந்த சேவைகள், நேர்முக தேர்வுக்கு நேரம் பெறுவது போன்ற சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

“பாஸ்போர்ட் சேவா வலைதளம் தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக அக்டோபர் 4 ஆம் தேதி இரவு 8 மணியில் இருந்து அக்டோபர் 7 ஆம் தேதி காலை 6 மணி வரை செயல்பாட்டில் இருக்காது,” என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

வலைதளம் செயல்படாது என்பதால், பொது மக்கள் மட்டுமின்றி பாஸ்போர்ட் சேவா வலைதளத்தை வெளியுறவு விவகாரங்கள் துறை அதிகாரிகள், குடிவரவு பணியக அதிகாரிகள், காவல் துறையை சேர்ந்தவர்கள் என யாரும் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

Cricket

WT20 உலகக் கோப்பை: Dead Ball பஞ்சாயத்து.. ICC ரூல்ஸ் என்ன சொல்லுது தெரியுமா?

Published

on

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டு விளையாடியது. இந்தப் போட்டியில் அம்பயர் எடுத்த முடிவு இந்திய அணியின் கேப்டன் மற்றும் தலைமை பயிற்சியாளரை போட்டி அம்பயர் மற்றும் மூன்றாம் நடுவருடன் வாக்குவாதம் செய்ய வைத்தது.

போட்டியில் நியூசிலாந்து அணி பேட் செய்த போது, சரியாக 14 ஆவது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட நியூசிலாந்து வீராங்கனை கெர், அதனை லாங்-ஆஃப்-க்கு அடித்துவிட்டு இரண்டு ரன்களை ஓட முயற்சித்தார். அப்போது, இரண்டாவது ரன் ஓடும் போது இந்திய விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் கைக்கு பந்து முன்கூட்டியே கிடைக்க, அவர் அதனை ஸ்டம்பிங் செய்துவிட்டார்.

தான் அவுட் ஆனதை உணர்ந்த கெர், களத்தை விட்டு வெளியேற துவங்கினார். அதுவரை அமைதி காத்த அம்பயர், கெர் அவுட் ஆனதாக நினைத்து வெளியேறிக் கொண்டிருந்த போது, அவரை மீண்டும் உள்ளே அழைத்ததோடு, குறிப்பிட்ட பந்து ‘டெட் பால்’ என்று அறிவித்தார். விக்கெட் என உணர்ந்து வெளியேறிய வீராங்கனையை, அம்பயர் டெட் பால் விதியை கூறி மீண்டும் களத்திற்குள் அழைத்த சம்பவம் தான் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் மற்றும் தலைமை பயிற்சியாளரை வாக்குவாதம் செய்ய வைத்தது.

இந்த விவகாரத்தில் ஐ.சி.சி. விதிகளின்படியே அம்பயர் முடிவு எடுத்திருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. ஐ.சி.சி. விதி 20-இன் கீழ் வரும் கிளாஸ் 20.1-இல் “பந்துவீச்சு அம்பயரை பொருத்தவரை ஃபீல்டிங் பக்கமும், விக்கெட்டில் உள்ள இரு பேட்டர்களும் விளையாட்டை நிறுத்துவதை தெளிவாக தெரிந்தால், பந்து ‘டெட் பால்’-ஆக கருதப்படும்,” என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஆனாலும், இந்த விவகாரத்தில் இரு அணி வீராங்கனைகளும் விளையாட்டை நிறுத்த முற்படவில்லை. மாறாக நியூசிலாந்து வீராங்கனை இரண்டாவது ரன் ஓட முற்படுகிறார், அப்போது இந்திய வீராங்கனை ஸ்டம்பிங் செய்துள்ளார்.

ஐ.சி.சி. விதி 20.6-இன் கீழ் “ஒருமுறை டெட் பால் என்று அறிவிக்கப்பட்டால், அந்த முடிவை மாற்றவோ, மீண்டும் அந்த பந்தை வீசச் செய்யவோ முடியாது,” என கூறுகிறது. ஐசிசி விதியின் கீழ் டெட் பால் என அறிவிக்கப்பட்ட முடிவை மீண்டும் மாற்ற முடியாது என்ற விதியை அம்பயர்கள் பின்பற்றியிருப்பார்கள் என்றே தெரிகிறது.

google news
Continue Reading

Trending