Connect with us

tech news

வாட்ஸ்அப் செயலியில் புது அப்டேட்.. இனி சிரமமே இல்லை..!

Published

on

வாட்ஸ்அப் செயலியில் டெஸ்டிங் செய்யப்படும் புது அம்சம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த அம்சம் செயலியின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். வெர்ஷன்களில் கிடைக்கிறது. புதிய அம்சம் வீடியோ நோட் மோட் என்று அழைக்கப்படுகிறது. இந்த அம்சம் கேமரா இன்டர்பேசில் இருந்தபடி மற்றவர்களுக்கு சிறு வீடியோக்களை பதிவு செய்து அனுப்பும் வசதியை வழங்குகிறது.

வீடியோ நோட் மோட் அம்சம் செயலியின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். வெர்ஷன்களில் டெஸ்டிங் செய்யப்படுகிறது. இந்த அம்சத்தை இயக்குவதற்காக ஷாட்கட் பட்டன் வழங்கப்படுகிறது.

இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி வாட்ஸ்அப் செயலியின் கேமரா இன்டர்பேஸில் புகைப்படம் மற்றும் வீடியோ ஆப்ஷன்களின் அருகிலேயே வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த அம்சம் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு விட்டது.

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.24.14.14 வெர்ஷனிலும், ஐ.ஓ.எஸ். 24.13.10.76 வெர்ஷனிலும் புதிய வீடியோ நோட் மோட் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக 2023 ஆண்டு வாட்ஸ்அப் செயலியில் இன்ஸ்டண்ட் வீடியோ நோட் அம்சம் வழங்கப்பட்டு இருந்தது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் 60 நொடிகள் வரையிலான வீடியோவை பதிவு செய்து வாட்ஸ்அப்-இல் பகிர முடியும்.

சமீபத்தில் வீடியோ நோட்களுக்கு எளிதில் பதில் அனுப்புவதற்கான ஷாட்கட் வாட்ஸ்அப் செயலியில் டெஸ்டிங் செய்யப்பட்டு வந்தது. கேமரா ஆப்ஷனிலேயே புதிய வீடியோ நோட்ஸ் அம்சம் வழங்கப்படுவதால், எளிதில் வீடியோக்களை பதிவு செய்து பகிர முடியும். இந்த அம்சம் வீடியோ நோட் அனுப்புவதை புது வழிமுறையில் வழங்குகிறது.

google news