Connect with us

latest news

15ஆம் தேதி முதல்… இனி இந்த பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்… தொடங்கி வைக்கிறார் முதல்வர்..!

Published

on

அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்த நிலையில் வரும் 15 ஆம் தேதி அதனை தொடங்கி வைக்கின்றார்.

அரசு பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் காலை உணவு சாப்பிடாமல் தவிர்த்து வருவதை பார்த்த முதல்வர் மு க ஸ்டாலின் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி காலை உணவு திட்டத்தை கொண்டு வருவதாக தெரிவித்திருந்தார். அதன்படி கடந்த 2022 ஆம் ஆண்டு அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதலமைச்சரின் காலை உணவு திட்டம் என்ற பெயரில் முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

முதற்கட்டமாக அரசு தொடக்கப் பள்ளிகளில் அதாவது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் 1545 பள்ளிகளில் படிக்கும் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ மாணவியர்களுக்கு பயன்பெறும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. 33 கோடியே 56 லட்சம் செலவில் இந்த திட்டம் முதல் கட்டமாக தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

காலை உணவு திட்டத்தை தொடங்கிய பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவ மாணவர்களின் வருகை அதிகரித்து இருப்பதாகவும், அவர்களின் ஊட்டச்சத்து மற்றும் கற்றல் திறனும் மேம்பட்டு இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்திருந்தன. இதனை பார்த்த அண்டை மாநிலங்களான தெலுங்கானா, கனடா, இலங்கை ஆகிய நாடுகளிலும் அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

பின்னர் 2023 ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள 30 ஆயிரத்து 992 அரசு பள்ளிகளில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இந்த திட்டத்தை தொடங்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்களில் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

2 லட்சத்து 20 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் 600 கோடியில் இந்த திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் வரும் காமராஜர் பிறந்த நாளான 15 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் 8.30 மணிக்கு இந்த திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கின்றார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சங்கர் மற்றும் அரசு அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *