latest news
தமிழகத்தில் வரும் 11ம் தேதி வரை… வானிலை ஆய்வு மையம் சொன்ன முக்கிய தகவல்…!
தமிழகத்தில் வரும் 11ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மேற்கு திசை வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று மற்றும் நாளை ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். ஏழாம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸில் இருந்து 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இன்று முதல் 9-ம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசும். 8 மற்றும் 9-ம் தேதிகளில் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்ககடல் பகுதிகளிலும் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.