Connect with us

latest news

விடுங்கடா என்னை… எனக்கு ரெஸ்ட் வேணும்.. உங்க உடம்பே காட்டும் 8 எச்சரிக்கைகள்…

Published

on

இப்போது இருக்கும் சமுதாயத்தின் நிலை எப்போதுமே வேலை, வேலை என்ற நிலைக்கு வந்து இருக்கிறது. ஓவர் உழைப்பு, மன அழுத்தம் முதலியவற்றால் உடல் தனக்கு தேவைப்படும் பிரேக் குறித்து நமக்கு சமிஞ்சை கொடுத்தாலும் அதனை நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படி உடல் பிரேக் கேட்கும் 8 அறிகுறிகள் என்ன தெரியுமா? 

வழக்கத்திற்கு அப்பாற்பட்ட சோர்வு:

தொடர்ச்சியான சோர்வு தான் உடலில் ஏற்பட்டு இருக்கும் பிரச்னையை சொல்லும் முதல் அறிகுறி. நல்ல தூக்கத்துக்கு பின்னரும் இந்த சோர்வு குறையாமலே இருக்கும். அந்த சோர்வு ஒருநாளின் மொத்த எனர்ஜியையும் கெடுத்துவிடும்.

கவனகுறைவுகள்:

மூளை எதோ தடைப்பட்டது போல இருக்கா? செய்ய வேண்டிய வேலைகள் எளிதாக இருந்தாலும் செய்ய முடியாமல் போராடுகிறீர்களா? கவனக்குறைவு பிரச்னை இருந்தால் அது கண்டிப்பாக எச்சரிக்கை தான். 

தலைவலி பிரச்னை:

அடிக்கடி தலைவலி ஏற்படுவது மன அழுத்தம் மற்றும் சோர்வின் உடல் வெளிப்பாடு. இந்த தலைவலி என்பது டென்சன் தலைவலி. தலையை சுற்றி வலி எடுக்கும். ஓவரான வலி மற்றும் சத்தம் மற்றும் வெளிச்சத்துக்கு கடுப்பாவது உள்ளிட்ட பிரச்னைகள் உண்டாகும்.

எமோஷனல் ரோலர் கோஸ்டர்: 

உங்கள் லிமிட்டை தாண்டி வேலை செய்வது உங்கள் மனநலனை பாதிக்கும். கோவம், மனம் அலைபாய்வது, வாழ்க்கையின் மூளையில் இருக்கிறோம் என்ற எண்ணம் ஆகியவை பொதுவான அறிகுறிகள். 

மனது சொல்வதை கேளுங்கள்:

மன அழுத்தம் உங்கள் உடல் நலத்தினை மட்டும் பாதிக்காமல், செரிமான பிரச்னையையும் ஏற்படுத்தும். வயிறு கோளாறு, மலச்சிக்கல், வயிறு கோளாறு உள்ளிட்ட பிரச்னைகள் அதிகம் வந்தாலும் அதை நீங்க உடனடியாக கவனிக்க வேண்டும். 

அடிக்கடி ஏற்படும் உடல்பிரச்னைகள்: 

சோர்வு மற்றும் மன அழுத்தம் சளி, காய்ச்சல் உள்ளிட்ட உடல்நல பிரச்னைகள் அடிக்கடி உருவாக்கும். இதனால் உடல் அடிக்கடி சரியில்லாமல் போனாலும் உடனே சூதானமாக இருக்க வேண்டும்.  

தூக்கமில்லாத இரவுகள்: 

தூக்கத்துக்கு போராட்டமாக இருக்கிறதா? இரவு தூக்கத்தில் அடிக்கடி முழிக்கிறீர்களா? அல்லது முழு தூக்கத்தினை அனுபவித்தாலும் உடல் சோர்வாகவே இருக்கிறதா? தூக்கமின்மை மற்றும் பாதிக்கப்பட்ட தூக்க நேரம் உங்கள் உடல் போராடுகிறது என்பதற்கு அர்த்தம்.

நிலையான கவலை மற்றும் வாழ்க்கையே வெறுத்த உணர்வு:

நிலையான பதட்டம் அல்லது முழுமையான பீதி தாக்குதல்களாக கூட மன அழுத்தம் ஏற்படும். சிறிய விஷயங்களைப் பற்றி கூட நீங்கள் தொடர்ந்து கவலைப்படுவதையோ அல்லது விளிம்பில் இருப்பதாக கூட உங்களுக்கு தோன்றும். உங்கள் வாழ்க்கைத் தரத்தை கணிசமாக பாதிக்கலாம்.

ஓய்வுக்காக உடலின் அழைப்பு:

உடல் ஓய்வுக்கு தொடர்ந்து அறிகுறிகளை எச்சரிக்கை அறிகுறிகளை கொடுக்கும். அப்படி கொடுக்கும் போது புறக்கணிப்பது வெறுப்பு, உணர்ச்சிகள், உடல் மற்றும் மன சோர்வு நிலைக்கு வழிவகுக்கும்.

google news