latest news
குடிமகன்கள் கவனத்திற்கு… செப்டம்பர் முதல் தமிழ்நாடு மது கடைகளில்… தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு..!
செப்டம்பர் மாதம் முதல் காலியான மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்து இருக்கின்றது.
தமிழக அரசு சார்பாக டாஸ்மாக்கில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த மதுபானங்கள் அனைத்தும் கண்ணாடி பாட்டில்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. டாஸ்மாக்கில் மதுபானத்தை வாங்கி அருந்தும் குடிமகன்கள் குடித்துவிட்டு பாட்டில்களை தூக்கி எறிந்து விடுகிறார்கள். இதனால் வன உயிர்கள் மிகுந்த அளவு பாதிக்கப்படுகிறார்கள்.
இதை தடுப்பதற்காக மலைப்பகுதிகளில் பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இந்த திட்டத்தை ஏன் தமிழகம் முழுவதும் செயல்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் ஏற்கனவே கேள்வி எழுப்பி இருந்தது. மேலும் இதற்கு பதில் அளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.
தமிழகம் முழுவதும் பல இடங்களில் மதுபான பாட்டில்கள் தூக்கி வீசப்படுகின்றன. இது தெருக்களில் இருக்கும் நாய்கள், பூனைகள் மேலும் மனிதர்களுக்கு கூட சில சமயம் இடையூறாக இருந்து வருகின்றது. அதனால் இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் கொண்டு வருவதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கூறி இருந்தது. இதே தொடர்ந்து இன்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் கொடுத்திருந்தது . அதில் வருகிற செப்டம்பர் மாதம் முதல் டாஸ்மாக்கில் மது பாட்டில்களை திரும்ப பெரும் திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்து இருக்கின்றது.