Connect with us

latest news

சென்னையில் அதிர்ச்சி.. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை!

Published

on

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆம்ஸ்ட்ராஙயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்து வந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவரின் வீடு சென்னையை அடுத்த செம்பியத்தில் உள்ளது. இரவு 7 மணி அளவில் வீட்டின் அருகே நின்று நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங்கை 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென சுற்றி வளைத்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டியது.

அதைத் தடுக்க முயன்ற ஆம்ஸ்ட்ராங் உடனிருந்த இருவரையும் அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. உணவு டெலிவரி செய்யும் நபர்கள் போல் சம்பவ இடத்துக்கு வந்த கும்பல், அங்கிருந்து உடனடியாகத் தப்பிச் சென்றிருக்கிறது. இதில், படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மருத்துவமனை மற்றும் ஆம்ஸ்ட்ராங்கின் வீடு இருக்கும் பகுதியில் அவரது ஆதரவாளர்களும் கட்சி நிர்வாகிகளும் குவிந்து வருகிறார்கள். அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு சென்னை முழுவதும் அனைத்து காவல் மாவட்டங்களிலும் போலீஸார் உஷார் படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

சென்னை செம்பியம் உள்ளிட்ட பெரம்பூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். சம்பவ இடத்தில் இருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் கைப்பற்றிய போலீஸார், தப்பியோடியவர்களைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கிடையே, சம்பவ இடத்துக்கு நேரில் வந்து காவல் இணை ஆணையர் அபிஷேக் தீக்‌ஷித் விசாரணை மேற்கொண்டார். மருத்துவமனைக்கு வந்த ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பரும் இயக்குநருமான பா.இரஞ்சித் கதறி அழுதார். இந்த படுகொலை சம்பவத்தை அடுத்து சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்தில் தப்பியோடியவர்களைப் பிடிக்க செம்பியம் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது.

யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?!

வழக்கறிஞரான ஆம்ஸ்ட்ராங் தலித் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். 2006 மாநகராட்சித் தேர்தலில் சுயேச்சையாக நின்று வெற்றிபெற்ற அவர், 2007-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். வழக்கறிஞர்கள் மத்தியிலும் தலித் உரிமை செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் பிரபலமாக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *