Connect with us

latest news

146 பழங்குடியின இளைஞர்களுக்கு… பணிநியமன ஆணை வழங்கிய முதல்வர் மு க ஸ்டாலின்…!

Published

on

146 பழங்குடியின இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கினார்.

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் பிற மாவட்டங்களில் இருக்கும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த பொறியியல், தொழில்நுட்பக் கல்வி, ஐடிஐ, பட்டப்படிப்பு படித்துவிட்டு வேலை இல்லாமல் தவித்து வரும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி அவர்களை சமூகத்தில் ஒரு உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறையின் மூலமாக திட்டம் ஒன்று வகுக்கப்பட்டது.

அதன்படி மலைப்பகுதியில் இருக்கும் கிராமங்களுக்கு நேரடியாக சென்று தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அங்கு வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரி இளைஞர்கள் 450 பேரை திரட்டி பல மாவட்டங்களில் வேலை வாய்ப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.

இதன் முடிவில் 200 பழங்குடியின இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 13ம் தேதி சென்னை கலைவாணரங்கத்தில் நடைபெற்ற விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் 200 பழங்குடியின இளைஞர்களுக்கான பயிற்சி அணை வழங்கப்பட்டது.

இந்த 200 பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலமாக கர்நாடக மாநிலம் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் பயிற்சி நிறுவனத்தில் மூன்று மாதம் காலம் பயிற்சி வழங்கப்பட்டது.  இதைத் தொடர்ந்து அதில் திறம்பட பயிற்சி பெற்ற இளைஞர்களில் 146 இளைஞர்களுக்கு நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு அவர்களின் கல்வித் திறன் மற்றும் தனிப்பட்ட திறமைகளின் அடிப்படையில் பணி நியமன ஆணையை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கி இருந்தார். 146 இளைஞர்களின் 106 ஆண்கள் மற்றும் 40 பெண்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *