latest news
ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய முடிவு… ஆனால் அங்க இல்லையாம்…
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அவரின் அலுவலகத்தில் புதைக்க சென்னை மாநகராட்சி ஒப்புதல் வழங்கியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருக்கும் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. நேற்றிலிருந்து இந்த சம்பவத்தால் பல இடங்களில் அக்கட்சியின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்து வந்தனர்.
ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும் இந்த கொலை வழக்கில் எட்டு பேர் கைது செய்யப்பட்டு விசாரண நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய உறவினர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள்.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்ஸ்ட்ராங் உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து அவரின் உடல் அயனாவரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. கட்சி அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ள தகவில் வெளியாகி இருக்கின்றது.
பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மாநகராட்சி இடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் ஆம்ஸ்ட்ராங் உடல் கல்டி அலுவலகத்தில் அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கவில்லை என்று சென்னை மாநகராட்சி மறுப்பு தெரிவித்து இருக்கின்றது.