Connect with us

latest news

ஜூலையில் அறிமுகமாகும் சாம்சங் ஃபோல்டபில் போன் – இணையத்தில் லீக் ஆன தகவல்!

Published

on

Samsung-Galaxy-Z-Fold-4

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z ஃபோல்டு 5 மற்றும் கேலக்ஸி Z ஃப்ளிப் 5 ஃபோல்டபில் ஸ்மார்ட்போன்கள் ஜூலை 26 ஆம் தேதி சியோல் நகரில் நடைபெறும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் விற்பனை ஆகஸ்ட் 11 ஆம் தேதி துவங்கும் என்று கொரியாவை சேர்ந்த சோசுன் எனும் செய்தி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாத வாக்கில், சாம்சங் நிறுவனம் தனது ஃபோல்டபில் ஸ்மார்ட்போன்களை கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. எனினும், இந்த ஆண்டு சாம்சங் நிறுவனம் தனது முந்தைய வழக்கத்திற்கு மாற்றாக ஜூலை மாதமே புதிய ஃபோல்டபில் சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரியாவில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வை இரண்டு இடங்களில் நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. இது கொரியா மற்றும் நியூ யார்க் நகரங்களில் நடைபெற அதிக வாய்ப்புகள் உண்டு. புதிய திட்டத்தின் மூலம், சாம்சங் நிறுவனம் ‘World EXPO 2030 BUSAN’-ஐ விளம்பரப்படுத்த திட்டமிட்டு வருகிறது.

Samsung-Galaxy-Z-Flip-4

ஏற்கனவே ‘World EXPO 2030’ நிகழ்வை நடத்த இத்தாலி, உக்ரைன் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகள் போட்டியிட்டு வருகின்றன. இந்த நிகழ்வுக்கு ஆதரவாக இருக்கும் வகையில், கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வை பூசானில் நடத்த சாம்சங் MX பிரிவு தலைவர் டிஎம் ரோ திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் என்ன எதிர்பார்க்கலாம்?

சாம்சங் கேலக்ஸி Z ஃப்ளிப் 5 மற்றும் கேலக்ஸி Z ஃபோல்டு 5 சாதனங்கள் தவிர, கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் கேலக்ஸி வாட்ச் 6, கேலக்ஸி டேப் S9 சீரிஸ், புதிய கேலக்ஸி பட்ஸ் உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம். இந்த நிகழ்வு ஜூலை 25 ஆம் தேதி துவங்கி ஜூலை 27 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிகிறது.

google news