latest news
வாட்ஸ்அப் சாட்களை லாக் செய்யும் புதிய அம்சம் – உடனே பயன்படுத்துவது எப்படி?
வாட்ஸ்அப் நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு தான் “சாட் லாக்” (Chat Lock) எனும் புதிய அம்சத்தை அறிவித்து இருந்தது. மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் இந்த அம்சத்தை அறிவித்தார். வாட்ஸ்அப்-இல் சாட் லாக் அம்சம் பயனர்களின் மிகவும் தனிப்பட்ட உரையாடல்களை பாதுகாப்பான ஃபோல்டரில் வைத்துக் கொள்ளும் வசதியை வழங்குகிறது. இதனை ஒருவர் மட்டுமே பயன்படுத்த முடியும்.
இந்த ஃபோல்டரில் மறைத்து வைக்கப்படும் சாட் விவரங்கள் நோட்டிஃபிகேஷனிலும் காண்பிக்கப்படாது. ஏற்கனவே பீட்டா வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த அம்சம் தற்போது வாட்ஸ்அப்-இல் அனைவருக்குமான ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்பட்டு வருகிறது.
வாட்ஸ்அப் சாட் லாக் அம்சம்:
இந்த அம்சம் “லாக்டு சாட்ஸ்” (Locked Chats) எனும் பெயரில் புதிய ஃபோல்டர் உருவாக்கி சாட்களை அதில் வைத்துக் கொள்ள செய்யும். இது ஏற்கனவே வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டு இருக்கும் ஆர்ச்சிவ்டு சாட் (Archived Chat) போன்றே செயல்படுகிறது. இதன் குறிப்பிட்டத்தக்க வசதியே, நீங்கள் விரும்பும் சாட்கள் பாதுகாப்பான ஃபோல்டரில் லாக் செய்யப்பட்டு, பின் அது சாட் லிஸ்ட்-இல் தெரியாதபடி மறைத்து வைக்கப்பட்டு விடும். இதனை பயனர்கள் ஏற்கனவே செட் செய்த பாஸ்வேர்டு அல்லது கைரேகை மூலமாக மட்டுமே இயக்க முடியும்.
வாட்ஸ்அப்-இல் சாட்களை லாக் செய்வது எப்படி?
– நீங்கள் லாக் செய்ய விரும்பும் சாட்-ஐ திறந்து, அதில் உள்ள இன்ஃபோ பகுதியில் கீழ்புறமாக ஸ்கிரால் செய்தால் சாட் லாக் அம்சம் இடம்பெற்று இருக்கும். அதனை க்ளிக் செய்ய வேண்டும்.
– இனி நீங்கள் தேர்வு செய்த சாட்-ஐ லாக் செய்ய கைரேகை வைக்கக் கோரும் தகவல் வரும். இவ்வாறு செய்த பின் தேர்வு செய்யப்பட்ட சாட், செயலியின் பாதுகாப்பான ஃபோல்டரில் வைக்கப்பட்டு விடும்.
– மறைத்து வைக்கப்பட்ட சாட்-ஐ திறக்க விரும்பினால், அந்த ஃபோல்டரை க்ளிக் செய்து திறக்க வேண்டிய சாட்-ஐ தேர்வு செய்து பின் கைரேகை வைக்க வேண்டும்.
வாட்ஸ்அப் செயலியில் சாட் லாக் அம்சம் அனைவருக்குமான ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் இது வழங்கப்பட்டு விடும். வரும் மாதங்களில் இந்த வசதியில் மேலும் அதிக ஆப்ஷன்களை சேர்க்க வாட்ஸ்அப் திட்டமிட்டு வருகிறது.