tech news
ஒருவாரம் தான் இருக்கு.. ஹானர் 200 பற்றி இதெல்லாம் தெரியுமா?
ஹானர் பிராண்டின் புதிய 200 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்- ஹானர் 200 மற்றும் ஹானர் 200 ப்ரோ இம்மாதம் 18 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளன. இரு மாடல்களின் இந்திய வெளியீட்டை ஹானர் உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும், இரு ஸ்மார்ட்போன்களின் விற்பனை இந்தியாவில் அமேசான் மற்றும் ஹானர் வலைதளங்கள், மெயின்லைன் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது.
புதிய ஹானர் 200 மற்றும் ஹானர் 200 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் ஏஐ சார்ந்த அம்சங்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் 6.78 இன்ச் Quad Curved டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. ஹானர் 200 ப்ரோ ஸ்மார்ட்போன் ஓஷன் சியான் மற்றும் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கும். ஹானர் 200 மாடல் மூன்லைட் வைட் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கும்.
இரு மாடல்களிலும் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 பிராசஸர், ஆண்ட்ராய்டு 14 சார்ந்த மேஜிக்ஓஎஸ் 8 கொண்டிருக்கும். இது உலகின் முதல் இன்டென்ட் பேஸ்டு யுசர் இன்டர்ஃபேஸ் ஆகும். இந்த ஓஎஸ் ஹானர் நிறுவனத்தின் MagicLM ஆன்-டிவைஸ் ஏஐ சார்ந்து இயங்குகிறது. இது ஸ்மார்ட்போனிற்கு ஏஐ சார்ந்து இயங்கும் ஏராளமான வசதிகளை வழங்குகிறது.
இதில் மேஜிக் கேப்ஸ்யூல், மேஜிக் போர்டல் மற்றும் மேஜிக் ரிங் போன்ற ஏஐ அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது. மேஜிக் 200 சீரிஸ் மாடல்கள் ஏஐ மூலம் பயனருக்கு ஏராளமான பயனுள்ள அம்சங்களை வழங்குவதோடு ஒட்டுமொத்த அனுபவத்தையும் மேம்படுத்துகிறது.