Connect with us

Cricket

கடந்த காலம் பற்றி கவலையில்லை.. இப்போ இதுதான் டார்கெட் – இஷான் கிஷன்

Published

on

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காததால் பிசிசிஐ-இன் வருடாந்திர ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட வீரர் இஷான் கிஷன். கடைசியாக 2023 நவம்பர் மாதம் இந்திய அணிக்காக விளையாடினார். இதைத் தொடர்ந்து அவர் இந்திய ஜெர்சியில் இதுவரை ஒருபோட்டியில் கூட விளையாட வில்லை.

இதனிடையே இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரை வென்று நாடு திரும்பியதோடு, இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அங்கு டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்திய அணிக்காக விளையாடுவது பற்றி இஷான் கிஷன் சமீபத்தில் தனியார் நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், “ரிஷப் பண்ட்-ஐ மீண்டும் களத்தில் பார்ப்பது உத்வேகத்தை கொடுக்கிறது. போட்டியை பொருத்தவரை அனைத்து வகையான கிரிக்கெட்டர்களுடன் போட்டியிடும் போது தான் உங்களது முழு திறமை வெளிப்படும். இதைத் தொடர்ந்து சாதிக்கும் போது தான், உங்களுக்கு திருப்தி கிடைக்கும். எனக்கு அது மிகவும் பிடிக்கும். இதில் நான் அழுத்தமாக உணரப்போவதில்லை.”

“மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட விரும்புகிறேன். டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளேன். அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட விரும்புகிறேன். எனது உடல்நிலையை சீராக வைத்துக் கொண்டு வரவிருக்கும் தொடர்களுக்காக என்னை தயார்ப்படுத்திக் கொள்ள இருக்கிறேன்.”

“எதிர்காலம் பற்றி அதிகம் நினைக்கப் போவதில்லை. தற்காலத்தில் இருக்கவே விரும்புகிறேன். இந்த நேரத்தில், நான் எப்படி சிறப்பாக மாற வேண்டும் என்றும் ஆறு மாதங்களுக்கு முன் நான் எப்படி இருந்தேனோ அந்த நிலைக்கு திரும்புவதில் மட்டும்தான் கவனம் செலுத்துகிறேன். புதுமையான சில ஷாட்களை அடிக்கவும், விக்கெட் கீப்பிங்கிலும் பணியாற்ற இருக்கிறேன்”

“கடந்த கால நிகழ்வுகளை பற்றியும், எதிர்காலம் பற்றியும் நினைத்துக் கொண்டு இருப்பதை விட இது மட்டும்தான் முக்கியத்துவம் வாய்ந்தது. உள்ளூர் போட்டிகள் துவங்குவதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். ஜார்கண்ட் அணிக்காக சிறப்பாக செயல்பட வேண்டும். பொருத்திருந்து பார்ப்போம்,” என்று தெரிவித்தார்.

google news