latest news
ரவுடிக்கு ரவுடி பாஷையா…? புது சென்னை கமிஷனரின் மிரட்டலான பேச்சு… அண்ணாமலை சொன்ன பதில்…!
புதிதாக பொறுப்பேற்று இருக்கும் காவல் ஆணையர் அருண் பேசியிருப்பதற்கு அண்ணாமலை பதிலளித்து இருக்கின்றார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இவரின் கொலை தொடர்பாக இதுவரை 11 பேர் சரணடைந்துள்ளனர். ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டதற்கு பழி வாங்குவதற்காக தான் இந்த கொலை நடந்துள்ளதாக அவர்கள் வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள்.
இதனிடையே கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை எனவும், அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள். திருமாவளவனும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையும் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்.
இந்த வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டிற்கு சென்று அவரின் மனைவி மற்றும் குடும்பத்தினரை பார்த்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் புதிதாக காவல் துறை ஆணையராக பதிவியேற்றி இங்கிருக்கும் அருணின் பேச்சு குறித்து நிபுணர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த அண்ணாமலை “அண்ணா இந்த ஆவேச பேச்சு எல்லாம் இங்கு தேவையில்லை. ரவுடிக்கு ரவுடி பாஷையில் பேசுறீங்க.. என்கவுண்டர் செய்வோம் என்ற பேச்சே அவசியம் இல்லாதது. தமிழ்நாடு ஒரு போலீஸ் ஸ்டேடாக மாறுவதில் எனக்கு விருப்பமில்லை, ஒரு சம்பவம் நடந்ததற்கு பிறகு நாங்கள் இப்படி செய்வோம், அப்படி செய்வோம் என்று கூறுவதெல்லாம் விட்டுவிட்டு நடப்பதற்கு முன்பு அதை தடுக்கும் வழியை காவல்துறையினர் எடுக்க வேண்டும்” என்று அண்ணாமலை தெரிவித்து இருக்கின்றார்.