Connect with us

latest news

சிவகாசி வெடிவிபத்து… நிவாரணம் அறிவித்த முதல்வர் மு க ஸ்டாலின்… எவ்வளவு தெரியுமா..?

Published

on

சிவகாசி வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் நிவாரணம் அறிவித்திருக்கின்றார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே குறிச்சி கிராமத்தில் முருகவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு சாலை செயல்பட்டு வருகின்றது. இன்று காலை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட ஊராய் ஏற்பட்டு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த குடோன் அறை மிகுந்த சேதமடைந்தது. மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் அனைத்தும் வெடித்து சிதறின.

இதற்கிடையே அங்கு வெடி மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்ட மாரியப்பன், முத்து முருகன் ஆகிய இரண்டு பேரும் உடல் கருகி பலியாகினர். இந்த கோர விபத்தில் சரோஜா, சங்கரவேல் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. காயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்நிலையின் முதல் மு க ஸ்டாலின் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார். அதில் சிவகாசி அடுத்த காளையர் குறிச்சி வெடி விபத்தில் இருவர் உயிரிழந்த செய்தியை கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். அவர்களின் குடும்பத்திற்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 3 லட்சம் நிவாரணமும், விபத்தில் பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் நிவாரணமும் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கின்றார்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *