சனி, ஞாயிறு விடுமுறை… சொந்த ஊர் போறீங்களா…? போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள்…!

0
128

வார இறுதி நாட்களை முன்னிட்டு, தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

தமிழக போக்குவரத்து கழகம் சார்பாக தமிழகத்திலிருந்து பல ஊர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. சென்னையில் இருந்து வார விடுமுறை என்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்தான். அதன்படி வருகிற வார விடுமுறையை கருத்தில் கொண்டு சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “வருகிற வெள்ளி மற்றும் சனிக்கிழமை விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து பல இடங்களுக்கும் பிற இடங்களில் இருந்து கூடுதலாக பயணிகள் தமிழக முழுவதும் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் தினசரி இயக்கும் பேருந்துகளை காட்டிலும் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளது.

அதன் படி சென்னை கிளாம்பக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று 275 பேருந்துகளும், சனிக்கிழமை 325 பேருந்துகளும் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 65 பேருந்துகளும், சனிக்கிழமை 65 பேருந்துகளும் இயக்க உள்ளது. வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னை கோயம்பேடு நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு வெள்ளிக்கிழமை 15 பேருந்துகளும் சனிக்கிழமை 15 பேருந்துகளும் இயக்க திட்டமிட்டுள்ளது.

மேலும் சொந்த ஊருக்கு திரும்பிய மக்கள் மீண்டும் சென்னை மற்றும் பெங்களூர் போன்ற ஊர்களுக்கு திரும்ப வசதியாக தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை 7,010 பயணிகளும், சனிக்கிழமை 2,387 பயணிகளும் ஞாயிற்று அன்று 6,756 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here