latest news
ஐபோன் வைச்சிருக்கீங்களா… உங்களுக்காகத்தான் இந்த எச்சரிக்கை
ஐபோன் பயனாளர்களைக் குறிவைத்து புதிய மோசடி நடைபெற்று வருவதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
எல்லாமும் டிஜிட்டல் மயமாகிவரும் நிலையில், ஆன்லைன் மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விதவிதமான மோசடிகளைப் பற்றிய செய்திகள் தினமும் வந்தபடியேதான் இருக்கின்றன. அப்படியான சமீபத்திய மோசடி பற்றிதான் சைபர்கிரைம் எச்சரித்திருக்கிறது.
ஐபோன் பயனாளர்களுக்கு ஐமெசேஜ் மூலமாக, உங்களுக்கு வந்திருக்கும் கொரியர்/பார்சல் தவறான முகவரி கொடுக்கப்பட்டிருப்பதால் டெலிவரி செய்ய முடியவில்லை. இதனாலேயே இரண்டு முறை டெலிவரி செய்ய முயன்றும் முடியவில்லை. 24 மணி நேரத்துக்குள் முகவரியை அப்டேட் செய்யுங்கள். அப்படி செய்தால்தான் பார்சலை டெலிவரி செய்ய முடியும்’ என ஒரு வெப் லிங்கோடு மெசேஜ் அனுப்பப்பட்டிருக்கும்.
அப்படியான மெசேஜ் வந்தால், அந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டாம். அது மோசடியான லிங்க். அந்த லிங்கை கிளிக் செய்தால் நீங்கள் மோசடிக்கு ஆளாக நேரிடலாம் என எச்சரிக்கையாக இருக்கும்படி ஐபோன் பயனாளர்களை சைபர்கிரைம் பிரிவின் கீழ் செயல்படும் சைபர் தோஸ்த் கேட்டுக்கொண்டிருக்கிறது.