பவுண்டரி லைனில் இதுதான் நடந்தது.. கேட்ச் பற்றி முதல்முறையாக மனம்திறந்த சூர்யகுமார் யாதவ்

0
180

டி20 உலகக் கோப்பை தொடரில் ஒற்றை கேட்ச் பிடித்து இந்திய அணியை வெற்றி பாதைக்கு திசை திருப்பியவர் சூர்யகுமார் யாதவ். டேவிட் மில்லர் அடித்த அபார சிக்சரை எல்லைக் கோட்டில் தடுத்து நிறுத்தியதோடு, அதனை கேட்ச் ஆக மாற்றி அசத்தினார். இதன் மூலம் இந்திய அணி அந்த போட்டியில் ஏழு விக்கெட்டுள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

சூர்யகுமார் யாதவ் பிடித்த அந்த கேட்ச் கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையாக மாறியது. பலரும் பவுண்டரி கோடு மாற்றி வைக்கப்பட்டது என்று கூறினர். போட்டியில் இந்திய அணி வெற்றி பெற ஏதுவாக எல்லைக் கோடு மாற்றப்பட்டது என்றும் கூறினர். இந்த விவகாரம் தொடர்பாக கிரிக்கெட் வல்லுநர்கள் துவங்கி ஏராளமான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி உண்மையில் அது அவுட் தான் என்று விளக்கினர்.

இந்த நிலையில், சம்பவத்தில் நேரடியாக தொடர்புடைய சூர்யகுமார் யாதவ் இறுதிப் போட்டியில் தான் பிடித்த கேட்ச் பற்றி முதல்முறையாக மனம்திறந்து பேசியுள்ளார். அப்போது, எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.

ஸ்ரீ ஹோசா மரிகுடி கோவிலுக்கு வந்த சூர்யகுமார் யாதவ் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், “தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் பந்தை பிடிக்கும் போது நான் எல்லைக் கோட்டை தொடவில்லை. நம்மால் எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியாது.”

“எனக்கு எது சரி என்று தோன்றியதோ அதைத் தான் நான் செய்தேன். கடவுள் அருளால், பந்து என்னிடம் வரும் போது நான் அங்கு இருந்தேன். அந்த கேட்ச்-ஐ பிடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த தருணத்தை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.”

“அது போன்ற கேட்ச்-ஐ பிடிக்க நான் பயிற்சியில் ஈடுபட்டேன். போட்டியின் போது எனது மனம் அமைதியாக இருந்தது. நாட்டிற்காக சிறப்பாக விளையாடும் வாய்ப்பை கடவுள் எனக்கு கொடுத்தார். அந்த தருணத்தில் நான் எதையும் நினைக்கவில்லை. கோடிக்கணக்கான மக்கள் மற்றும் எங்களின் கனவு உலகக் கோப்பை வெல்வது,” என்று தெரிவித்தார்.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here