3-வது டி20: 23 ரன்களில் இந்தியா வெற்றி – தொடரில் 2-1 என்று முன்னிலை

0
76

சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன.

இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் சுப்மன் கில் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் முறையே 36 மற்றும் 66 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய அபிஷேக் ஷர்மா 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து வந்த ருதுராஜ் கெய்க்வாட் 49 ரன்களை அடித்தார். சஞ்சு சாம்சன் 12 ரன்களை எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை குவித்தது. ஜிம்பாப்வே சார்பில் பிலெசிங் முசர்பானி மற்றும் சிகிந்தர் ரசா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

183 ரன்களை துரத்திய ஜிம்பாப்வே அணிக்கு சரியான துவக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் துவக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பியனர். அடுத்து வந்த டியன் மேயர்ஸ் 49 பந்துகளில் 65 ரன்களை விளாசினார். இதன் மூலம் அந்த அணியின் ஸ்கோர் மெல்ல அதிகரித்தது. இவருடன் ஆடிய கேப்டன் ரசா தன் பங்கிற்கு 15 ரன்களை அடித்தார்.

அடுத்து களமிறங்கிய மடான்டே மற்றும் வெலிங்டன் முறையே 37 மற்றும் 18 ரன்களை அடித்தனர். இதன் மூலம் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் இந்திய அணி 23 ரன்களில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளையும், கலீல் அகமது 1 விக்கெட் வீழ்த்தினர்.

இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற அடிப்படையில் முன்னணி பெற்றுள்ளது.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here