Connect with us

latest news

தமிழகத்தில் 20 லட்சம் 5ஜி பயனாளர்கள் – ஏர்டெல் அசத்தல்!

Published

on

Airtel-5G-Plus

ஏர்டெல் நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் தனது 5ஜி பிளஸ் சேவையை வழங்க துவங்கியது. நாடு முழுக்க 5ஜி சேவையை வழங்குவதில் மும்முரமாக ஈடுபட்டு வரும் ஏர்டெல் நிறுவனம், தமிழ் நாட்டில் மட்டும் ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 20 லட்சங்களை கடந்துவிட்டதாக அறிவித்து இருக்கிறது. தற்போது தமிழ் நாடு முழுக்க சுமார் 500-க்கும் அதிக நகரங்கள் / டவுன்களில் ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவை வழங்கப்பட்டு வருவதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ் நாட்டில் கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, திருப்பூர், ஓசூர், வேலூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மாநிலம் முழுக்க 460 டவுன்கள், 173 கிராமங்களில் ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர ரெயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் மாநிலத்தின் மிக முக்கிய வர்த்தக பகுதிகளில் ஏர்டெல் 5ஜி பிளஸ் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியா முழுக்க 3 ஆயிரத்து 500-க்கும் அதிக டவுன்கள் / கிராமங்களில் 5ஜி பிளஸ் சேவை வழங்கப்பட்டு வருகிறது. ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ளது. நாடு முழுவதிலும் செயல்பட்டு வரும் ஏர்டெல் ரிடெயில் ஸ்டோர்கள், தமிழ் நாட்டில் 76 ரிடெயில் ஸ்டோர்களில் ஏர்டெல் 5ஜி பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் மையகள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பயனர்கள் இந்த ஸ்டோர்களில் ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவையை பயன்படுத்தி பார்க்க முடியும்.

Airtel-5G-Plus

Airtel-5G-Plus

ஒவ்வொரு நாளும் இந்தியாவில் 30 முதல் 40 நகரங்களில் 5ஜி பிளஸ் சேவையில் இணைக்கப்பட்டு வருவதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டின் ஒவ்வொரு நகரம் மற்றும் முக்கிய கிராமபுற பகுதிகளில் 5ஜி சேவையை வழங்க ஏர்டெல் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

“தமிழ் நாடு மாநிலத்தில் ஏர்டெல் 5ஜி பிளஸ் பயன்படுத்துவோர் எண்ணிக்கை சமீப காலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. அதிவேக ஏர்டெல் 5ஜி நெட்வொர்க்கில் 20 லட்சம் பேர் இணைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. எங்களது நெட்வொர்க்கை மேலும் மேம்படுத்தி மாநிலம் முழுக்க ஒவ்வொரு நகரம், மிகமுக்கிய கிராமபுற பகுதிகளில் வாடிக்கையாளர்களை அதிவேக இணைய சேவையை பெற்று HD வீடியோ ஸ்டிரீமிங், கேமிங், ஏராளமான சாட்டிங், உடனடி போட்டோ அப்லோடு என்று பல்வேறு பயன்களை பெற வைப்போம்,” என்று தமிழ் நாட்டுக்கான பாரதி ஏர்டெல் நிறுவன தலைமை செயல் அதிகாரி தருன் விர்மானி தெரிவித்தார்.

google news