latest news
தமிழகத்தில் நாளை இந்த 65 கோவில்களில் கும்பாபிஷேகம்… எங்கெங்க தெரியுமா…?
தமிழகத்தில் நாளை 65 கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழகத்தில் இருக்கும் பல கோயில்களில் நாளை கும்பாபிஷேகம் நடைபெற இருக்கின்றது. இது தொடர்பாக இந்து சமய அறநிலைதுறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “முதல்வர் மு க ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறையில், குடமுழுக்கு திருப்பணிகள் பெயர் மற்றும் குளங்கள் புனரமைப்பு கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்தல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்தி வழங்குதல் போன்ற பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கடந்த 2021 மே 7ஆம் தேதி முதல் இன்று அதாவது ஜூலை 11ஆம் தேதி வரை தமிழகத்தில் 1856 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. 9141 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கும்பாபிஷேகம் நடைபெற்ற 66 ஆண்டுகளும், பாலாலயம் செய்யப்பட்டு 36 ஆண்டுகள் கடந்த நிலையில் பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தி திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு 1.12 கோடி மதிப்பீட்டில் செலவிடப்பட்டுள்ளன. தற்போது 65 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதன்படி திருவள்ளூர் மாவட்டம் பவானி அம்மன் கோவில், திருவள்ளூர் மாவட்டம் ஆலங்குடி ஆதசகாயேஸ்வரர் கோவில், திருச்சி மாவட்டம் பூர்த்தி கோயில் திருமகர்த்தீஸ்வரர் கோயில் உள்ளிட்ட 65 கோவில்களில் குடமுழுக்கு நாளை மிக விமர்சையாக நடைபெற உள்ளது.
மேலும் சென்னை கருகாத்தம்மன் கோவில், சேலம் மாவட்டம் சீதாராமச்சந்திரன் மூர்த்தி கோயில், தஞ்சாவூர் மாவட்டம் அமிர்தகடேஸ்வரர் கோயில், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மௌன சந்தை கரியமாணிக்க பெருமாள் கோவில் என பல கோயில்கள் இந்த லிஸ்டில் அடங்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.