மக்களுக்காக முதல்வர் திட்டம்… மு.க ஸ்டாலின் வெளியிட்ட 15 புதிய அறிவிப்புகள்… என்னென்ன தெரியுமா…?

0
67

தர்மபுரி மாவட்டத்திற்கு 15 புதிய அறிவிப்புகளை மு க ஸ்டாலின் வெளியிட்டு இருக்கின்றார். இந்த அறிவிப்புகள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தர்மபுரி மாவட்டத்திற்கு தற்போது 15 புதிய அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கின்றார். அந்த அறிவிப்புகள்: “51 கோடி ரூபாய் செலவில் அரூர் அரசு மருத்துவமனையில் உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படும். தர்மபுரி வெண்ணம்பட்டி சாலையில் புதிய ரயில் மேம்பாலம் 38 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். அரூர் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.

பஞ்சப்பள்ளி ராஜபாளையம் அணைக்கட்டுகள் புறனமைக்கப்படும். சிட்டிலிங் அரசநத்தம் பகுதியில் பழங்குடியினர் உற்பத்தி செய்யும் ராகி, சாமை, வரகு ஆகியவற்றின் மதிப்பு கூட்டுப் பொருளாக்க கிடங்கு அமைக்கப்படும். தீர்த்த மலையில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்கப்படும். பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பழுதடைந்த வகுப்பறைகள் புதுப்பிக்கப்படும்.

பெரியபட்டி வெள்ளாளப்பட்டி ஊராட்சிகளில் 2.54 கோடி மதிப்பீட்டு சமுதாய கூடங்கள் கட்டப்படும். மொரப்பூர் மற்றும் அரூர் பகுதியில் 7 குழந்தைகள் மையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும். இருமத்தூர் தென்பெண்ணை ஆறு தலைமை நீரேற்று நிலையத்தில் நீரேற்று குழாய் அமைக்கப்படும்” என்று 15 அறிவிப்புகளை முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்திருக்கின்றார்.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here