cinema
‘லிவிங் டு கெதர்’… அதெல்லாம் சரிப்பட்டு வராது… கேரள உயர்நீதிமன்றம் கருத்து…!
லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப் என்பது திருமணம் கிடையாது என கேரள உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அதேபோல் லிவிங் டுகெதர் முறையில் வாழும் நபரை கணவர் என்று அழைக்க முடியாது சட்டப்படி திருமணம் செய்து கொண்டால் மட்டுமே அவரை கணவர் என்று அழைக்க முடியும் என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எர்ணாகுளத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் இளம் பெண்ணுடன் லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்துள்ளார். அந்த இளம் பெண் இளைஞர் மீது குடும்ப வன்முறை செய்வதாக புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை செய்த கேரளா நீதிமன்றம் லிவிங் டு கெதர் உறவில் இருக்கும் நபரை பங்குதாரர் என்று மட்டுமே கூற முடியும்.
பங்குதாரர்களிடமிருந்து உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தப்பட்டால் அது குடும்ப வன்முறை வரம்பிற்குள் வராது என்று தீர்ப்பு வழங்கி இருக்கின்றது. மேலும் இளைஞர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குடும்ப வன்முறை வழக்கு தவறானது என கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.