சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் முறை – இந்திய அணி படைத்த அபார சாதனை

0
40

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல்முறையாக 150 டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வரும் இந்திய அணி நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணியை 23 ரன்களில் வீழ்த்தியதன் மூலம் இந்த சாதனையை படைத்தது.

நேற்றைய போட்டியை பொருத்தவரை இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் அரைசதம் அடித்தும், பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக செயல்பட்டதும் வெற்றியை உறுதிப்படுத்தியது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இது சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு 150-வது வெற்றியாக அமைந்தது.

அந்த வகையில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150 வெற்றிகளை குவித்த முதல் அணியாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்திய அணியை தொடர்ந்து அதிக டி20 போட்டிகளில் வென்ற அணிகள் பட்டியலில் பாகிஸ்தான் அணி 142 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்திலும் 111 வெற்றிகளுடன் நியூசிலாந்து அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன.

ஆஸ்திரேலியா அணி 105 வெற்றிகளுடன் நான்கவது இடத்திலும் தென் ஆப்பிரிக்கா அணி 104 சர்வதேச டி20 போட்டிகளில் வெற்றி பெற்று ஐந்தாவது இடத்திலும் உள்ளது.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரை பொருத்தவரை இந்திய அணி முதல் டி20 போட்டியில் தோல்வியை தழுவியது. இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

பிறகு நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் இந்தியா வெற்றி கதையை தொடர்கிறது. இரு அணிகள் மோதும் நான்காவது டி20 போட்டி வருகிற 13 ஆம் தேதியும், ஐந்தாவது போட்டி வருகிற 14 ஆம் தேதி நடைபெற உள்ளன.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here