நார்ட் 4 மாடலுக்கு 6 ஆண்டுகள் அப்டேட் கிடைக்கும் – ஒன்பிளஸ் தடாலடி

0
63

ஒன்பிளஸ் நிறுவனம் வருகிற 16 ஆம் தேதி இத்தாலியில் நடைபெறும் நிகழ்வில் புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. புது சாதனங்கள் வெளியீடு தொடர்பான பணிகளில் ஒன்பிளஸ் மும்முரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், இத்தாலி நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நார்ட் 4 ஸ்மார்ட்போனுக்கு நான்கு ஆண்டுகள் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் ஆறு ஆண்டுகள் வரை செக்யுரிட்டி அப்டேட் வழங்குவதாக ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட்போன் மாடலுக்கு இத்தனை ஆண்டுகள் அப்டேட் வழங்குவதாக ஒன்பிளஸ் அறிவித்து இருப்பது இதுவே முதல் முறை ஆகும். அந்நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கும் இத்தனை ஆண்டுகள் அப்டேட் வழங்குவதாக ஒன்பிளஸ் இதுவரை அறிவித்தது இல்லை. ஒன்பிளஸ்-இன் இந்த அறிவிப்பு காரணமாக புது நார்ட் 4 ஸ்மார்ட்போனை பயனர்கள் நீண்ட காலத்திற்கு பயன்படுத்த முடியும் என்று நம்பலாம்.

மேலும், நார்ட் 4 ஸ்மார்ட்போன் TÜV SÜD Fluency 72 Month A ரேட்டிங் பெற்று இருப்பதாக ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மிக தீவிரமாக டெஸ்டிங் செய்யப்பட்டு இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நீண்ட காலத்திற்கு அதிவேகமாகவும், சீராகவும் இயங்கும் என சான்று பெற்று இருக்கிறது.

ஒன்பிளஸ் நார்ட் 4 ஸ்மார்ட்போனில் ஒன்பிளஸ் பேட்டரி ஹெல்த் எஞ்சின் தொழில்நுட்பம் வழங்கப்பட உள்ளது. இது ஸ்மார்ட்போனை 1600 முறை சார்ஜ் செய்தாலும் பேட்டரி சீராக இயங்குவதை உறுதிப்படுத்தும். புது நார்ட் 4 ஸ்மார்ட்போன் வெளியீட்டை ஒன்பிளஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் நேரலை செய்ய இருக்கிறது.

இந்த நிகழ்வில் புதிய ஸ்மார்ட்போன் மட்டுமின்றி, ஒன்பிளஸ் பேட் 2, ஒன்பிளஸ் பட்ஸ் 3 ப்ரோ, ஒன்பிளஸ் வாட்ச் 2R சாதனங்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளன. புது ஒன்பிளஸ் சாதனங்கள் இந்தியாவில் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here