latest news
இனி இது தேவையில்ல… மின் இணைப்பு ஈசியா வாங்கலாம்… அமலுக்கு வந்த புதிய விதிமுறை…!
இனி கட்டிட நிறைவு சான்றிதழ் இல்லாமல் மின் இணைப்பை பெறலாம் என்ற புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது.
பொதுவாக தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு கட்டிட நிறைவு சான்றிதழ் வாங்க வேண்டும் என்றால் வரைபடத்தில் உள்ள அளவில் தான் கட்டிடம் இருக்க வேண்டும். அதில் விதிமீறல்கள் ஏதேனும் இருந்தால் பணி நிறைவு சான்றிதழ் வழங்கப்படாது. கட்டிடம் கட்டுபவர்கள் விதிகளை சரியாக கடைப்பிடித்து வந்தால் மட்டுமே இந்த சான்றிதழ்களை பெற முடியும்.
அதே வேளையில் இந்த சான்றிதழ் பெறுவதில் பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுவதாக பலரும் புகார் கொடுத்து வந்தனர். எனவே தமிழக அரசு தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது. அதன்படி குறிப்பிட்ட சில அளவுள்ள கட்டிடங்களுக்கு இனி பணி நிறைவு சான்றிதழ் தேவையில்லை. அதன்படி 14 மீட்டர் உயரம் மிகாமல் உள்ள எட்டு குடியிருப்பு அலகுகள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்கள்.
750 சதுர மீட்டர் பரப்பளவிற்கு உட்பட்ட வீடு 14 மீட்டர் உயரம் மிகாமல் 300 சதுர மீட்டர் கட்டிட பரப்பளவிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அளவில் இருக்கும் வணிக கட்டிடங்கள் மற்றும் அனைத்து தொழிற்சாலை கட்டிடங்களுக்கும் விலக்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “வணிக கட்டிடங்கள் எந்த அளவாக இருந்தாலும் சரி கட்டிடப் பணி நிறைவு சான்றிதழ் கட்டாயம் இருந்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும் என்ற நிலை தற்போது தளர்த்தப்பட்டுள்ளது”.
தமிழக அரசின் இந்த அறிவிப்பு ஒரு புறம் வரவேற்பு பெற்றிருந்தாலும் இதற்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். இப்படி பணி நிறைவு சான்றிதழ் தேவை இல்லை என்று கூறினால் பலரும் விதிகளை மீறி கட்டிடங்களை கட்டுவார்கள் என்று தெரிவித்து வருகிறார்கள்.