Connect with us

Cricket

பாகிஸ்தான் செல்லணுமா? சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்கு இருக்கும் சிக்கல்…

Published

on

சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்த இருக்கும் நிலையில், அங்கு சென்று விளையாட முடியாது என பிசிசிஐ தரப்பில் தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் இது இந்தியாவிற்கு தான் பின்னடைவு என்ற தகவல்களும் கசிந்து வருகிறது.

இந்திய அணி 2008ம் ஆண்டில் இருந்து பாகிஸ்தான் சென்று விளையாடுவதை தவிர்த்து வருகிறது. இரண்டு நாடுகளும் இருதரப்பு போட்டிகளில் கூட விளையாடாமல் உள்ளனர். இந்நிலையில் சாம்பின்ஸ் டிராபி தொடர் அடுத்த வருடம் நடக்க இருக்கிறது. இத்தொடரில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணி விளையாடும் போட்டிகள் லாகூரில் நடக்க இருக்கிறது.

ஆனால் இந்திய அணி விளையாட வேண்டிய போட்டிகளை துபாய் அல்லது இலங்கையில் நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதற்கு மற்ற அணிகள் ஒப்புக்கொள்வது கடினம் தான். ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகள் இதற்கு கண்டிப்பாக எதிர்ப்பு தெரிவிக்கவே வாய்ப்பு அதிகம்.

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு சாதகமான சூழலை அமைக்க மற்ற நாடுகள் பிரச்னை செய்யும். அதுமட்டுமல்லாமல், இந்திய அணி துபாயில் விளையாடினால் அவர்களுடன் விளையாட வேண்டிய அணிக்கு மேலும் அலைச்சலாக அமையும். சில கிரிக்கெட் வாரியங்கள் கடனில் இருப்பதும் இந்தியாவுக்கு சிக்கலாக அமைந்துள்ளது.

பிசிசிஐ கோரிக்கையை ஐசிசி ஏற்காத பட்சத்தில் இந்திய அணி தொடரில் இருந்து வெளியேறினால், அடுத்த வாய்ப்பு இலங்கை அணிக்கு தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஏனெனில், 2023ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை லீக் சுற்றில் தகுதி பெற்ற 8 அணிக்கு தான் சாம்பியன்ஸ் தொடரில் வாய்ப்பு கிடைக்கும். அந்தவகையில் இந்தியா விலகினால் 9வது இடத்தில் இருக்கும் இலங்கை உள்ளே வரும் எனக் கூறப்படுகிறது

இருந்தும், டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு பின்னர் சீனியர் வீரர்களின் கடைசி கட்டம் என்பதால் சில கட்டுப்பாடுகள் உடன் இந்திய அணி பாகிஸ்தான் செல்லவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

google news