latest news
இந்த 4 மாவட்டங்களில் ‘டமால் டுமில்’… மஞ்சள் எச்சரிக்கை கொடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்…!
தமிழகத்தில் இந்த நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் ஏழு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்பதற்காக மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்.
நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமானது முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் பகல் நேரத்தில் வெப்பநிலை சற்று அதிகரித்து காணப்படும். மன்னர் வளைகுடா பகுதியில் 55 கிலோமீட்டர் வரை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அடுத்து ஐந்து நாட்களுக்கு அப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்” எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.