latest news
மாணவ, மாணவியர்களுக்கு ஒரு சூப்பர் குட் நியூஸ்… தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை…!
தமிழக பள்ளிகளில் ஒரு நாள் விடுமுறை விடப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டு தொடங்கி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. பொதுவாக தமிழகத்தில் ஜூன் 9ஆம் தேதி அல்லது முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் வானிலை மாற்றம் காரணமாக 10 நாட்கள் கழித்து ஜூன் 10ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்பட்டன.
முதல் நாள் முதலே பாட புத்தகங்கள், நோட்டுகள், சீருடை உள்ளிட்டவை விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. புதிய கல்வி ஆண்டிற்கான நாள்காட்டி வெளியிடப்பட்டது. அதில் மொத்த வேலை நாட்கள் 220 என்றும், வழக்கமாக 210 நாட்கள் வேலை நாட்களாக இருக்கும் நிலையில் இந்த முறை கூடுதலாக 10 நாட்கள் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் வண்ணம் அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது.
பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் அதை ஈடு செய்வதற்காக இப்படிப்பட்ட ஒரு முடிவு எடுத்திருப்பதாக கூறப்பட்டது. மேலும் கடந்த ஜூன் 29ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் செயல்பட்டன. அதற்கு அடுத்த வாரம் ஜூலை 6ஆம் தேதி விடுமுறை வழங்கப்பட்டது. இந்நிலையில் நாளை சனிக்கிழமை பள்ளிக்கல்வித்துறை வேலை நாட்களாக அறிவித்திருந்தது.
இந்த சூழலில் மாதத்தின் 2-வது சனிக்கிழமை அன்று விடுமுறை அளிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இடம் ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை வைத்திருந்தனர். இதை ஏற்ற பள்ளிக்கல்வித்துறை அரசு நாளை ஜூலை 13ஆம் தேதி பள்ளிகள் இயங்காது என்று அறிவித்திருக்கின்றது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் அடுத்து வரும் மாதங்களில் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை தினமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை தினமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.