Connect with us

tech news

ரூ. 10,499-க்கு iQOO 5ஜி போன் அறிமுகம்

Published

on

ஐகூ (iQOO) பிரான்டின் முற்றிலும் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஐகூ Z9 லைட் 5ஜி என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் பிரிவில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 6.56 இன்ச் HD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

மீடியாடெக் டிமென்சிட்டி 6300 சிப்செட் கொண்டிருக்கும் ஐகூ Z9 லைட் 5ஜி 6GB ரேம், 6GB வரை விர்ச்சுவல் ரேம் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4GB ரேம், 128GB மெமரி மற்றும் 6GB ரேம், 128GB மெமரி என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஓஎஸ் 14 கொண்டுள்ளது. இந்த போனில் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களுக்கு 50MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 2MP டெப்த் சென்சார் மற்றும் 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது. 3.5mm ஆடியோ ஜாக் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் IP64 தர சான்று பெற்ற டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.

மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.4, யுஎஸ்பி டைப் சி போர்ட் உள்ளது. ஐகூ Z9 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 15W சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்திய சந்தையில் ஐகூ Z9 லைட் 5ஜி மாடல் அக்வா ஃபுளோ மற்றும் மோச்சா பிரவுன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 10,499 என்றும் 6GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 11,499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய ஐகூ ஸ்மார்ட்போனின் விற்பனை ஜூலை 20 ஆம் தேதி அமேசான் இந்தியா மற்றும் ஐகூ இந்தியா இ ஸ்டோரில் துவங்குகிறது.

google news