Connect with us

tech news

சவுண்ட் அதிரும்.. சோனி சவுண்ட் பார் அறிமுகம்!

Published

on

சோனி நிறுவனத்தின் முற்றிலும் புதிய பிரேவியா தியேட்டர் பார் 8 மற்றும் பிரேவியா தியேட்டர் பார் 9 சவுண்ட் பார் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இரு மாடல்களிலும் 360 டிகிரி ஸ்பேஷியல் சவுண்ட் மேப்பிங், டால்பி அட்மோஸ், 360 ரியாலிட்டி ஆடியோ என ஏராளமான வசதிகளை கொண்டுள்ளது. இவை பயனர்களுக்கு தலைசிறந்த ஆடியோ அனுபவம் வழங்கும். இத்துடன் புதிய சவுண்ட் பார்கள் IMAX நுட்பத்திலும் இயங்கும்.

புதிய பிரேவியா தியேட்டர் பார் 8 மாடலில் 11 ஸ்பீக்கர்கள் உள்ளன. தியேட்டர் பார் 9 மாடலில் மொத்தம் 13 ஸ்பீக்கர்கள் உள்ளன. இந்த ஸ்பீக்கர்கள் சோனியின் 360 ஸ்பேஷியல் சவுண்ட் மேப்பிங் தொழில்நுட்பத்தை வழங்குகின்றன. இது ஆடியோ பல்வேறு மூளைகளில் இருந்து ஒலிப்பது போன்ற அனுபவத்தை வழங்கும். இதோடு சக்திவாய்ந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.

இரண்டு புதிய சவுண்ட் பார் மாடல்களிலும் சவுண்ட் ஃபீல்ட் ஆப்டிமைசேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இவை சவுண்ட்பார் வைக்கப்பட்டுள்ள அறைக்கு ஏற்றபடி ஒவ்வொரு ஸ்பீக்கரின் ஆடியோ ஒலியை தானாக அட்ஜஸ்ட் செய்யும். இதனால் பயனர்கள் தலைசிறந்த ஆடியோ அனுபவம் பெறலாம்.

சோனி பிரேவியா தியேட்டர் பார் 8 மற்றும் 9 மாடல்களில் டால்பி அட்மோஸ், DTS:X மற்றும் IMAX சான்று பெற்றுள்ளது. இது பயனருக்கு ஹோம்-தியேட்டர் போன்ற அனுபவத்தை வழங்கும். இதோடு ஆடியோ தெளிவாக இருப்பதை உறுதி செய்யும். இதற்காகவே இவற்றில் 360 ரியாலிட்டி ஆடியோ வசதி உள்ளது. இந்த சவுண்ட்பார்கள் AI வசதி கொண்டுள்ளன. இவை தெளிவான வசன உச்சரிப்பை உறுதிப்படுத்தும்.

கனெக்டிவிட்டிக்கு இவற்றில் HDMI ARC மற்றும் ஆப்டிக்கல் இன்புட் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை 8K/4K ஆடியோவை 120Hz-இல் வெளிப்படுத்தும். இத்துடன் ஆட்டோ லோ லேடன்சி மோட் உள்ளது. இது கேமிங்கின் போது அனுபவத்தை சிறப்பாக மாற்றும்.

இந்திய சந்தையில் புதிய சோனி பிரேவியா தியேட்டர் பார் 8 விலை ரூ. 89,990 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தியேட்டர் பார் 9 விலை ரூ. 1,29,990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவற்றின் விற்பனை முன்னணி வலைதளங்கள், சோனி ரீடெயில் ஸ்டோர் மற்றும் முன்னணி விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.

google news