Cricket
இங்க அணிதான் எல்லாமே.. தனிப்பட்ட வீரர்களுக்கு முக்கியமில்லை… கறார் கண்டிஷன் போட்ட கம்பீர்…
இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் கௌதம் கம்பீர் இங்கு அணிதான் எல்லாமே. தனிப்பட்ட வீரர்களின் நலன்களை மட்டும் பார்க்க முடியாது எனவும் காரராக தெரிவித்து இருப்பதாக தகவல்கள் கசிந்து இருக்கிறது.
இந்திய அணி t20 கோப்பையை வென்ற கையோடு அணியின் பயிற்சியாளராக இருக்க முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் ஓய்வு பெற்றார். அதைத் தொடர்ந்து, அணியின் மூத்த பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதன் அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது.
அதிரடிக்கு பெயர் போன கம்பீர் தன்னுடைய ஆட்ட காலத்தில் கூட அணியின் கணக்கை மட்டுமே எதிர்நோக்குவார். தனிப்பட்ட வீரர்களுக்காக அணி இல்லை. அணிக்காக மட்டுமே வீரர்கள் என்பதே அவருடைய எண்ணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதை தன்னுடைய பேட்டி ஒன்றில் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்.
அதில் பேசியவர், ஒவ்வொரு இந்திய வீரர்களும் எல்லா ஃபார்மட்டிற்கும் சிறப்பாக விளையாட வேண்டும். அவர்கள் ஒரு நாள், டெஸ்ட் மற்றும் டி20 என எல்லா போட்டிகளிலும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்த வேண்டும். ஒரு வீரர் டெஸ்ட்டிற்கும் இன்னொரு வீரர் டி20க்கு என முத்திரை வாங்க கூடாது.
வீரர்களுக்கு காயம் ஏற்படுவது சகஜம் தான். அதிலிருந்து மீண்டு வந்து தங்களுடைய திறமையை நிரூபிக்க வேண்டும். வீரர்கள் அணிக்காக இருக்க வேண்டும். அணிதான் இங்கு எல்லாமே. நீங்கள் நல்ல ஃபார்மில் இருக்கும்போது நாட்டிற்காக மொத்தத்தையும் கொடுக்க வேண்டும். முக்கியமாக போட்டியில் நேர்மையாக விளையாட வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.