Connect with us

latest news

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு!

Published

on

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் ஏழை மக்களுக்காக எளிய விலையில் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தின் தரத்தினை பரிசோதனை செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு நடத்தி இருக்கிறார்.

சென்னையில் 200 கோட்டங்களில், 7 அரசு மருத்துவமனைகளில் மொத்தமாக 388 அம்மா உணவகங்கள் கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்டது. அது இந்த ஆட்சியில் தொடர்ந்து நல்ல முறையில் இயங்கும் என முன்னவே அறிவிக்கப்பட்டது. இந்த உணவகங்களில் ஒருநாளைக்கு சுமார் 1.5 லட்ச உணவுகள் வழங்கப்படுகிறது.

அம்மா உணவகங்களுக்கு தேவைப்படும் அரிசி, பருப்பு, கோதுமை மானிய விலையில் தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக்கழகத்தில் இருந்து வழங்கப்படுகிறது. காய்கறிகள் திருவல்லிக்கேணி நகரக் கூட்டுறவு சங்கத்தின் மூலமாகவும் தயிர் உள்ளிட்டவை ஆவின் மூலமாகவும் வழங்கப்படுகிறது.

மொத்தமாக 469 கோடி செலவிடப்பட்டு இருப்பதாக தமிழக அரசு தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், இன்று சென்னையில் இருக்கும் 122வது மாநகராட்சியான தேனாம்பேட்டை அம்மா உணவகத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் திடீர் விசிட் அடித்து ஆய்வு செய்தார்.

அந்த உணவகத்தின் செயல்பாடுகள், உணவின் தரம், வாடிக்கையாளர்களின் கருத்து என அனைத்தையும் கேட்டு இருக்கிறார். மேலும் மற்ற அம்மா உணவகங்களில் பழுதடைந்த பாத்திரங்களை சீரமைக்கவும் 7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் இருக்கும் அம்மா உணவகத்துக்கும் அதன் அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் சென்று தேவையானவைகளை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

google news