latest news
எல்லோரும் ஒன்னு தான் இங்க…உதயநிதி ஸ்டாலினின் ருசீகர பேச்சு…
திராவிட முன்னேற்ற கழக இளைஞர் அணியின் நாற்பத்தி ஐந்தாம் ஆண்டு துவக்க விழா நடந்தது. இதில் இளைஞரணியின் செயலாளரும், தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். 2026ம் ஆண்டு தமழகத்தில் திமுக தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமைய நிர்வாகிகள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதோடு மீண்டும் ஆட்சியமைப்பதையே லட்சியமாக வைத்து பணியாற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக தன்னை நியமிக்க வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டு வரும் தகவல்கள் குறித்து ரூசிகரமான தகவலைச் சொன்னார்.
உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என தீர்மானம் போடப்பட்டுள்ளது குறித்து பேசினார். முதலமைச்சருக்கு துணையாக தான் இருக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் இப்போதே பலரும் துண்டு போட்டு வைத்து கொள்வோம் என்ற நினைப்பில் இருக்கிறார்கள் என சொன்னதும் அவையில் சிரிப்பொலி பொங்கியது.
தொடர்ந்து பேசிய உதயநிதி தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் அனைவருமே முதல்வருக்கு துணையாக இருப்பவர்கள் தான். எல்லா அமைச்சர்களும் இங்கு சமம் தான். முதலமைச்சரின் பணிகள் சிறப்படைய ஒத்துழைப்பவர்கள் என்றார்.
எத்தனை பதவிகள் வந்தாலும் தனக்கு இளைஞரணி செயலாளர் பதவி தான் நினைவில் நிற்கும் என முதலமைச்சர் முன் காலத்தில் சொல்லியது போல தான் தனக்கும் இளைஞரணியின் செயலாளர் பதிவியே நிறைவை தருகிறது என்றார்.
இளைஞர் படையை சிறப்பாக வழி நடத்தும் உதய நிதியை வாழ்த்துவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.