Cricket
சூர்யாவுக்கு சப்போட்டாக களமிறங்கிய அஜீத்!…இதுக்கு அவர் தகுதியானவர் தானாம்!…
இந்திய அணி வீரர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையும், கனவுமாக இருந்து வந்தது உலகக்கோப்பையை வெல்வது. ரோஹித் சர்மாவின் தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற இருபது ஓவர் உலகக் கோப்பையை வென்று ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றியது.
இந்த தொடருக்கும் பின் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் மாற்றம் மேற்கொள்ள வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரும், இருபது ஓவர் கிரிக்கெட் கோப்பையை வென்றுக் கொடுத்த கேப்டனுமான ரோஹித் சர்மா சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தனது ஓய்வினை அறிவித்ததால்.
இவரைப் போலவே இந்திய அணியின் ஜாம்பவான் வீரரான விராத் கோலி, ஆல் ரவுண்டர் ஜடஜாவும் தங்களது ஓய்வினை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்திய அணியின் முக்கிய வீரரும், ஆல்-ரவுண்டருமான ஹார்திக பாண்டியா இருபது ஓவர் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அதிரடி பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்த தேர்வு குறித்து பிசிசிஐயின் தலைமை தேர்வுக்குழு அதிகாரியும், இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டருமான அஜீத் அகார்க்கர் கேப்டன் பொறுப்பிற்கு சூர்ய குமார் யாதவ் முற்றிலும் தகுதியானவர் என்றார். அவருக்கு சிறந்த கிரிக்கெட் மூளை உள்ளது என்றார். அதோடு உலகிலேயே சிறந்த டி-20 வீரர்களில் ஒருவர், அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாடக் கூடியவர். அவரிடம் அதிக திறன்கள் உள்ளன, ஆனால் அதை கண்டறிவது கடினமானவை என்றார்.