Connect with us

Cricket

டி20 உலகக் கோப்பை: கேட்ச் பிடித்ததும் சூர்யகுமார் சொன்ன விஷயம் – சீக்ரெட் உடைத்த அக்சர் பட்டேல்

Published

on

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி தொடர்பான பேச்சுக்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. குறிப்பிட்ட இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுவிடுமோ என்ற நிலை இருந்தது. அப்போது தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் விளாசிய சிக்சரை இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் எல்லைக் கோட்டில் தடுத்து நிறுத்தி, பிடித்த கேட்ச் இந்திய அணி வெற்றிக்கு மிகமுக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த கேட்ச் உண்மையில் அவுட் என்று சிலரும், அவுட் இல்லை என்றும் சிலரும் இணையத்தில் வார்த்தை போரிலும் ஈடுபட்டனர். இந்த நிலையில், சூர்யகுமார் யாதவ் இறுதிப் போட்டியில் அந்த கேட்ச் பிடித்த பிறகு, அணியினர் என்ன பேசிக் கொண்டார்கள் என்ற விவரங்களை இந்திய அணி வீரர் அக்சர் பட்டேல் தெரிவித்துள்ளார்.

“டேவிட் மில்லர் அந்த பந்தை அடிக்கும் போது நான் மிட்-விக்கெட்டில் நின்று கொண்டு இருந்தேன், அவர் அடித்ததும் பந்து சிக்சரை கடந்துவிட்டது என்றே நினைத்தேன். ஆனால் சூர்யா அந்த கேட்ச்-ஐ பிடித்ததும், எல்லோரும் அவரிடம், கயிற்றை தொட்டுவிட்டாயா? என்றே கேட்டோம்.”

“முதலில் ஆம் என்று நம்பிக்கையாக கூறியவர், பிறகு எனக்கு மிகச் சரியாக தெரியவில்லை என்று கூறினார். அதன்பிறகு ரீ-பிளே பார்த்த போது, நாங்கள் உலகக் கோப்பையை வென்றுவிட்டோம் என்று 99 சதவீதம் நம்பினோம். அந்த கேட்ச் அதிக மன அழுத்தம் கொண்ட ஒன்று, அவர் அந்த சூழலில் தனது மனதை கட்டுப்படுத்திய விதயம் அற்புதம்,” என்று அக்சர் பட்டேல் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

google news