Connect with us

Finance

பட்ஜெட் எதிரொலி…சட்டென சரிந்த தங்கத்தின் விலை!…நீடிக்க வாய்ப்பு?…

Published

on

Jewel

சர்வதேச பொருளாதார நிலையும் , அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இவை தான் நாள்தோறும் தங்கத்தின் விலையில் மாற்றங்களை நிர்ணயிக்கிது. தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும் இந்தியாவில்  நிலையில்லாத நிகழ்வே இருந்து வருகிறது.

இதுவும் கூட தங்கத்தின் விலை மாறுபாட்டிறகான மற்றொரு காரணமாகவும் இருந்து வருகிறது. நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் விலை ஏற்ற இறக்கங்களை காட்டியும் வருகிறது தங்கம் விலை நிலவரம்.

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கத்தின் விற்பனை விலையில் மிகப்பெரிய மாற்றம் காணப்பட்டது. சென்னையில் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் நேற்றை விட இன்று காணப்பட்டுள்ள மாற்றம் நகைப்பிரியர்களை ஆனந்தப்படுத்தியுள்ளது.

Gold

Gold

நேற்றைய விலையை விட இன்று கிராமிற்கு இரு நூற்றி அறுபது ரூபாய் (ரூ.260/-) குறைந்துள்ளது. பட்ஜெட் தாக்கலுக்கு முன்னர் தங்கத்தின் விலை நூற்றி இருபது ரூபாய் (ரூ.120/-)குறைந்தது. இந்த விலை குறைவுகளுக்கு அடுத்து ஒரு கிராம் தங்கம் ஆராயிரத்து ஐனூற்றி ஐம்பது ரூபாய்க்கு விற்கப்படுகிறது (ரூ.6550/-).

ஒரு சவரனுக்கு இரண்டாயிரத்து என்பது ரூபாய் (ரூ.2080/-) குறைந்து, ஐம்பத்தி இரண்டாயிரத்து நானூறு ரூபாய்க்கு (ரூ.52,400/-) தங்கத்தின் விற்பனை விலை இருந்து வருகிறது. வெள்ளியின் விலையும் நேற்றை விட கிராமிற்கு நாற்பது காசுகள் குறைந்து (40/-காசுகள்) தொன்னூற்றி ஐந்து ரூபாய் அறுபது காசுகளுக்கு விற்கப்படுகிறது (ரூ.95.60/-), ஒரு கிலோ வெள்ளி தொன்னூற்றி ஐந்தாயிரத்து அறனூறு (ரூ. 95,600/-) ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தங்க இறக்குமதியின் மீதான சுங்க வரி பதினைந்து சதவீதத்திலிருந்து ஆறு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தங்கத்தின் விற்பனை விலையில் ஏற்பட்டுள்ள குறைவு நீடிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

google news
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Finance

ஹைப்பர் டென்ஷன் கொடுக்குதா ஹைக்?…தலைவலியாக மாறுகிறதா தங்கம்?…

Published

on

Gold

ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் தங்கத்திற்கு என தனி மவுசு இருந்தே வருகிறது. நாளுக்கு நாள் அதன் மீதான மோகமும், அதன் தேவையும் அதிகரித்தே வரும் நிலையே இருக்கிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் விற்கப்படும் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை அடுத்தடுத்து உயர்வை சந்தித்து வருவது நகை பிரியர்களுக்கு தலைவலி தரக்கூடிய விஷயமகவே மாறி வருகிறது.

நேற்று மாற்றம் ஏதும் தென்படாமல் இருந்த தங்கத்தின் விற்பனை விலை இன்று ஒரே நாளில் அதிரடி உயர்வை சந்தித்துள்ளது. ஒரு கிராம் ஏழாயிரத்து அறுபது ரூபாய்க்கு (ரூ.7,060/-) விற்பனையாகி வந்த நிலையில் இன்று நாற்பது ரூபாய் (ரூ.40/-) உயர்ந்து ஏழாயிரத்து நூறு ரூபாய்க்கு (ரூ.7,100/-)விற்பனை செய்யப்படுகிறது.

Silver

Silver

ஒரு சவரனின் விலை நேற்று ஐம்பத்தி ஆராயிரத்து நானூற்றி என்பது ரூபாய்க்கு (ரூ.56,480/-) விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று ஒரு சவரனின் விலை ஐம்பத்தி ஆராயிரத்து என்னூறு ரூபாயாக (ரூ.56,800/-)உள்ளது. சவரன் ஒன்றுக்கு இன்று முன்னூற்றி இருபது ரூபாய் (320/-)உயர்ந்துள்ளது.

வெள்ளியின் விலையும் இன்று தங்கத்தைப் போலவே ஏறுமுகத்திலேயே இருந்தது. நேற்று ஒரு கிராம் வெள்ளி நூற்றி ஓரு ரூபாய்க்கு (ரூ.101/-) விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரு ரூபாய் உயர்ந்து (ரூ.1/-) நூற்றி இரண்டு ரூபாய்க்கு (ரூ.102/-) விற்கப்பட்டு வருகிறது.

ஒரு கிலோ பார் வெள்ளி நேற்று ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாயாக (ரூ.1,01,000/-) இருந்து வந்த நிலையில் இன்று ஆயிரம் ரூபாய் (ரூ.1,000/-) உயர்ந்து ஒரு லட்சத்து இரண்டாயிரம் ரூபாய்க்கு (ரூ.1,02,000/-) விற்கப்படுகிறது. தொடர்ச்சியாக ஏறுமுகத்திலேயே இருந்து வரும் தங்கம் மற்றும் வெள்ளியின் விற்பனை விலையால் ஆபரணப்பிரியர்கள் அதிகமான கவலைக்கு உள்ளாகி வருகின்றனர்.

 

 

google news
Continue Reading

Finance

எகிறி அடிக்கும் கோல்ட் ரேட்…ஆசையெல்லாம் ஆகிவிடுமா க்ளீன் போல்டு?…

Published

on

Gold

செப்டம்பர் மாதத் துவக்கத்திலிருந்தே தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் அடிக்கடி மாற்றங்கள் காணப்பட்டே வருகிறது. நாளுக்கு நாள் விற்பனை விலையில் ஏற்ற, இறக்கங்களோடு இருந்து வருகிறது. அதிலும் தமிழ் மாதமான புரட்டாசி துவங்கியதிலிருந்தே தங்கம் மற்றும் வெள்ளியின் விற்பனை விலை ஏறு முகத்திலேயே இருந்து வருகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவையே தங்கத்தின் விலையை தீர்மானித்து வருகிறது. இன்று சென்னையில் விற்கப்படும் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை தடாலடியாக உயர்ந்துள்ளது, வெள்ளியின் விலையிலும் ஏற்றம் காணப்பட்டது நகை பிரியர்களை அதிர வைத்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ஏழாயிரம் ரூபாயை தாண்டி புதிய உச்சத்தை அடைந்துள்ளது ஆபரணப்பிரியர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சென்னையில் இன்று விற்கப்பட்டு வரும் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்த்தின் ஒரு கிராம் விலை ஏழாயிரத்து அறுபது ரூபாயாக (ரூ.7,060/-)உள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ஐம்பத்தி ஆறாயிரத்து நானூற்றி என்பது ரூபாய்க்கு (ரூ.56,480/-) விற்கப்படுகிறது.

Ornament

Ornament

கடந்த சில நாட்களாகவே எகிறியடித்து வரும் தங்கத்தின் விலை இன்று  ஒரு கிராம் ஏழாயிரம் ரூபாயையும் (ரூ.7,000/-) கடந்து சென்றுள்ளது தங்கம் வாங்க நினைப்பவர்களின் கவலையை அதிகரித்துள்ளது. வெள்ளியின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

வெள்ளி கிராம் ஒன்றின் விலை இன்று நூற்றி ஓரு ரூபாயாக இருக்கிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாயாக (ரூ.1,01,000/-)உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது நகை பிரியர்களுக்கு பேரிடியாக உணரப்படுகிறது.

google news
Continue Reading

Finance

தடுமாறும் தங்கம் விலை…புரட்டிப் போடும் புரட்டாசி?…

Published

on

சர்வதேச பொருளாதார சூழலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் தங்கத்தின் விற்பனை விலையை தீர்மானித்து வருகிறது. சடங்கு சம்பர்தாயங்கள் அதிகமாக கடைபிடிக்கப்படும் நாடுகளில் இந்தியா முக்கியத்துவம் பெற்று விளங்குவதால்,  தங்கத்திற்கான தேவையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே தான் வருகிறது.

செப்டம்பர் மாதத் துவக்கத்திலிருந்தே ஏற்ற, இறங்களை அதிலும் குறிப்பாக விலை உயர்வை பல முறை
சந்தித்து வந்த இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் சென்னை விலையின் நிலைமை தமிழ் மாதமான புரட்டாசி பிறந்ததிலிருந்து தலை கீழாக மாறியுள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சிப் பாதையிலேயே காணப்படுகிறது புரட்டாசி மாதம் துவங்கியதிலிருந்து. நேற்று ஐம்பத்தின் நாலாயிரத்து என்னூறு ரூபாய்க்கு (ரூ.54,800/-) விற்கப்பட்ட ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலையில் இன்றும் தடாலடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Jewel

Jewel

நேற்றை விட இன்று சவரனுக்கு இருனூறு ரூபாய் (ரூ.200/-) வீழ்ச்சியை சந்தித்து ஐம்பத்தி இரண்டாயிரத்து அறனூறு ரூபாய்க்கு (ரூ.52,600/-) விற்கப்படுகிறது.

கிராம் ஒன்றின் விலை இன்று ஆராயிரத்து என்னூற்றி இருபத்தி ஐந்து ரூபாயாக (ரூ.6,825/-)உள்ளது. தங்கத்தின் விலை இன்று இறங்கு முகத்தில் இருந்தாலும் வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் காணப்படவில்லை.  நேற்று கிராம் ஒன்றுக்கு தொன்னூற்றி ஆறு (ரூ.96/-) ரூபாய்க்கு விற்கப்பட்ட அதே விலையில் இன்றும் வெள்ளி விற்கப்படுகிறது.

ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை தொன்னூற்றி ஆறாயம் ரூபாய்க்கும் (ரூ.96,000/-) விற்பனையாகிறது. தொடர்ச்சியாக இறங்கு முகத்தில் இருந்து வரும் தங்கத்தின் விலையால் நகை பிரியர்கள் மகிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.

google news
Continue Reading

Finance

தொடரும் விலை குறைவு…ஆபரணப் பிரியர்கள் திடீர் உற்சாகம்!.

Published

on

Gold silver

சென்னையில் விற்கப்பட்டு வரும் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விற்பனை விலையில் இந்த மாதத் துவக்கத்திலிருதே ஏற்ற, இறக்கங்கள் இருந்தே காணப்படுகிறது. உயர்வை நோக்கி செல்லும் இவைகளின் விலை திடீரென வீழத்துவங்கும். இப்படி நிலை இல்லாதத் தன்மையோடு தான் இந்த மாதம் நகர்ந்து வருகிறது.

நேற்றைப் போலவே இன்றும் சென்னையில் விற்கப்பட்டு வரும் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விற்பனை விலைகளில் சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரு கிராம் தங்கம் ஆறாயிரத்து என்னூற்றி அறுபத்தி ஐந்து ரூபாய்க்கு (ரூ.6865/-) விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று கிராமிற்கு நேற்றைப் போலவே இன்றும் பதினைந்து ரூபாய் (ரூ.15/-) குறைந்து.

நேற்று முன் தினத்தை விட சவரனுக்கு நூற்றி இருபது ரூபாய் குறைந்து விற்பனையானதைப் போலவே இன்றும் சவரன் ஒன்றிற்கு நூற்றி இருபது ரூபாய் (ரூ.120/-) குறைந்துள்ளது.

Jewel

Jewel

ஐம்பத்தி நான்காயிரத்து தொல்லாயிரத்து இருபது ரூபாய்க்கு (ரூ. 54,920/-) நேற்று விற்பனையாகி வந்த தங்கம் இன்று ஐம்பத்தி நான் காயிரத்து என்னூறு ரூபாய்க்கு (ரூ.54,800/-) விற்கப்படுகிறது. தங்கத்தின் விலை குறைவைப் போலவே தான் வெள்ளியின் விற்பனை விலையிலும் மாற்றம் காணப்படுகிறது.

நேற்று தொன்னூற்றி ஏழு (ரூ.97/-) ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த ஒரு கிராம் வெள்ளி இன்று ஒரு ரூபாய் குறைந்து தொன்னூற்றி ஆறு ரூபாய்க்கு (ரூ.96/-) விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று தொன்னூற்றி ஆறாயிரம் ரூபாயாக (ரூ.96,000/-) உள்ளது. தொடர்ந்து இரண்டு நாட்களாக சரிவை சந்தித்து வரும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையால் ஆபரணப் பிரியர்களுக்கு திடீர் உற்சாகம் பிறந்துள்ளது.

google news
Continue Reading

Finance

சரிவை சந்தித்த தங்கம் விலை…வீழ்ச்சியடைந்த வெள்ளியின் விலையும்…

Published

on

Jewel

செப்டம்பர் மாதமான இந்த மாதத் துவக்கத்திலிருந்தே தங்கம் மற்றும் வெள்ளியின் விற்பனை விலையில் நிலையில்லாத தன்மை தொடர்தே வருகிறது. ஒரு நாள் விலை உயர்வையும், பல நேரங்களில் வீழ்ச்சியையும் கண்டு வருகிறது இதன் விற்பனை விலை. சென்னையில் விற்கப்படும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் நேற்றை விட இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி தருவதாகவே இது அமைந்துள்ளது.

சென்னையில் நேற்று இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ஆராயிரத்து என்னூற்றி என்பது ரூபாய்க்கும் (ரூ.6,880/-) , ஒரு சவரன் ஐம்பத்தி ஐந்தாயிரத்து நாற்பது  ரூபாய்க்கும் (ரூ.55,040/-) விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

gold Jewel

gold Jewel

சவரன் ஒன்றிற்கு இன்று நூற்றி இருபது ரூபாய் குறைந்து (ரூ.120/-) ஐம்பத்தி நாலாயிரத்து தொல்லாயிரத்து இருபது ரூபாய்க்கு (ரூ.54,920/-) விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை  ஆறாயிரத்து என்னூற்றி அறுபத்தி ஐந்து ரூபாய்க்கு (ரூ.6,865/-) விற்பனையாகி வருகிறது.நேற்று ஒரு சவரன் ஐம்பத்தி ஐயாயிரத்து நாற்பது (ரூ.55,040/-).ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது.

தங்கத்தின் விலையைப் போலவே தான் வெள்ளியின் விற்பனை விலையிலும் இன்று சிறிய அளவிலான மாற்றம் ஏற்பட்டுள்ளது. கிராம் ஒன்று தொன்னூற்றி எட்டு ரூபாய்க்கு (ரூ.98/-) விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரு ரூபாய் குறைந்து தொன்னூற்றி ஏழு ரூபாய்க்கு (ரூ.97/-) விற்கப்படுகிறது.

இதனால் ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை தொன்னூற்றி ஏழாயிரம் ரூபாய்க்கு (ரூ.97,000/-) விற்பனை செய்யப்படுகிறது. விற்பனை விலையில் பெரிய அளவிலான மாற்றம் இல்லாத போதிலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பது ஆபரணப் பிரியர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

google news
Continue Reading

Trending