Connect with us

Finance

எங்க வழிக்கு வாங்க…மோடிக்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின்…

Published

on

Stalin

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட்டை வெளியிட்டார். இந்த பட்ஜெட் அறிவிப்பில் ஆந்திர, பிகார் மாநிலங்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக கருத்து பரவலாக வெளிவந்துள்ளது.

எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று  தாக்கல் பட்ட பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், இது மோடி அரசை காப்பாற்றுவதற்கான பட்ஜெட்டே தவிர வேறு ஒன்றும் கிடையாது என விமர்சித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் பட்ஜெட் மீதான தனத எதிர்ப்பினை தெரிவித்துள்ளார். திருக்குறளை பற்றி பேசும் மோடி அரசின் பட்ஜெட்டில் தமிழ் மொழியை பற்றியோ, தமிழ் நாட்டை பற்றியோ ஒரு வார்த்தை கூட குறிப்பிடப்படவில்லை என குற்றம் சாட்டினார்.

Nirmala Seetharaman

Nirmala Seetharaman

மைனாரிட்டி பாஜகவை, மெஜாரிட்டி பாஜகவாக மாற்றிய கட்சிகளுக்காகவே இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என சொன்னார். பிற மாநிலங்களுக்கு ஒதுக்கப்படுவதாக சொல்லப்பட்டுள்ள நிதி மேலான்மையை சொன்னது படி செய்யுமா? ஒன்றிய அரசு என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒன்றிய பாஜக அரசின் செயலிலோ, சிந்தனையிலோ தமிழகம் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது என்றார். தமிழகத்தில் தங்களுக்கு வாக்களித்த மக்கள், வாக்களிக்காத மக்கள் என பாரபட்சமின்றி ஆட்சி செய்து வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியை பார்த்து அதே போல செயல் பட வேண்டும் என பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு தனது அறிவுரையை மத்திய அரசின் பட்ஜெட்டிற்கு பின் நடந்த செய்தியளர்கள் சந்திப்பில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சொல்லியிருக்கிறார்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *