latest news
அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல்முறை… கமலா ஹாரிஷ் செய்த சாதனை!…
அமெரிக்க தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டோனால்ட் டிரம்பை விட ஜனநாயக கட்சியை சேர்ந்த கமலா ஹாரிஷுக்கு இளைஞர்களிடம் வரவேற்பு கூடி இருக்கிறது. இதை தொடர்ந்து கமலா ஹாரிஷ் கடந்த 24 மணிநேரத்தில் செய்த சாதனை குறித்த ஆச்சரிய தகவல்களும் வெளியாகி உள்ளது.
குடியரசுக்கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பை எதிர்த்து முதலில் போட்டியிட்டு இருந்தவர் தற்போதைய அமெரிக்க அதிபராக இருக்கும் ஜோ பைடன் தான். ஆனால் பைடன் தொடக்கத்தில் இருந்தே தொய்வை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. முதல் நேரடி விவாதத்தில் ட்ரம்பை எதிர்க்க முடியாமல் தோல்வியை தழுவினார்.
இது பலரிடத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் ஜோ பைடன் உடனடியாக போட்டியிலிருந்து விலக வேண்டும் என்ற எதிர்ப்பு குரல் கிளம்பியதை எடுத்து சமீபத்தில் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தார். இதை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக இருக்கிறார்.
அடுத்த மாதம் அதிகாரப்பூர்வமாக இது அறிவிக்கப்பட இருக்கும் பட்சத்தில், கடந்த 24 மணி நேரத்தில் கமலா ஹாரிஸின் தேர்தல் பிரச்சாரத்திற்காக 678 கோடி ரூபாய் நிதி குவிந்திருக்கிறது. அமெரிக்க வரலாற்றில் தேர்தல் பிரச்சாரத்திற்காக குவிந்த அதிகபட்ச நிதி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
கமலா ஹாரிசை எளிதாக வென்று விடுவேன் என டொனால்ட் ட்ரம்ப் கூறியதை அடுத்து அவருக்கு தற்போது வெற்றி வாய்ப்பு அமோகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி நடக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.