Cricket
பயிற்சியாளராக கம்பீர் வந்தது பித்தலாட்டம்… இவர் தான் வந்திருக்க வேண்டும்… சாடிய பாகிஸ்தான் பிரபலம்…
இந்தியா கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டதை அடுத்து பலரிடம் வரவேற்பும் சில எதிர்ப்புகளும் கிளம்பி வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தானின் முன்னாள் பந்து வீச்சாளர் தன்வீர் தற்போது கம்பீரை பித்தலாட்டம் செய்தவர் என விமர்சித்திருக்கிறார்.
டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின்னர் இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் ஓய்வு பெற்றார். அவரிடத்தை நிரப்ப அதிரடி வீரராக இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான கௌதம் கம்பீர் நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானது. சமீபத்தில் அவருடைய நியமனம் அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து இவரின் முதல் தொடராக இந்திய அணி இலங்கையுடன் மோத இருக்கிறது.
கம்பீர் எண்ட்ரிக்கு பின்னர் இந்திய அணி தேர்வு பெரிய அளவில் விமர்சனத்தையும் எதிர்நோக்கியது. இந்திய அணிக்குள் பெரும்பாலான கொல்கத்தா வீரர்கள் வந்ததும், நல்ல பார்மில் இருக்கும் சென்னையை சேர்ந்த ருத்ராஜ், அபிஷேக் ஷர்மா உள்ளிட்ட வீரர்கள் நீக்கப்பட்டதும் ரசிகர்களிடம் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கௌதம் கம்பீர் தன்னுடைய அரசியல் செல்வாக்கை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமனம் வாங்கி இருக்கிறார். உண்மையில் இந்த இடத்திற்கு வர வேண்டியவர் இந்திய அணியின் முன்னாள் வீரரான லட்சுமணன் தான். இந்திய அணியின் பி டிமிற்காக நிறைய வெற்றிகளை வாங்கிக் கொடுத்தவர்.
தேசிய கிரிக்கெட் அகாடமியில் அடுத்த பயிற்சியாளருக்காக தன்னை மெருகேற்றி வந்தவர். இந்திய அணிக்காக 134 டெஸ்ட்களில் விளையாடியிருக்கிறார். ஆனால், அவரைப் பின்னுக்கு தள்ளி கம்பீர் தன்னுடைய செல்வாக்கு மூலம் இந்த இடத்தை பிடித்திருக்கிறார். இதனால் தான் லட்சுமணன், பயிற்சியாளர் நேர்காணலில் கலந்து கொள்ளவில்லை எனவும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்து வீச்சாளரான தன்வீர் குற்றம் சாட்டி இருக்கிறார்.