Finance
மத்திய அரசுக்கு கமல் வாழ்த்து!…அரசியலில் வெற்றி கொடுக்குமா இந்தியனின் இரண்டாவது பாகம்?…
மக்கள் நீதி மையத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் நேற்று நாடளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து விமர்சித்துள்ளார், நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் கட்சியை துவங்கி தனது அரசியல் பயணத்தை முறையே துவங்கினார்.
தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகளை நியமித்து தனது கட்சிப்பணியில் தீவிரம் காட்டி வருகிறார். நடந்து முடிந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் பங்கேற்று போட்டியிட்டது.
கோயம்பத்தூர் தொகுதியில் கமல்ஹாசன் களம் கண்டார். பாரதிய ஜனதா கட்சியில் வேட்பாளரான வானதி சீனிவாசனிடம் தோல்வியடைந்தார். கடும் போட்டி நிலவி வந்த நிலையில் கமல்ஹாசன் வானதியிடம் தோல்வியடைந்தார். அதன் பிறகு நடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தை மேற்க்கொண்டார்.முதல் தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிட்டவர். அடுத்து வந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைத்து அரசியிலில் தனது இரண்டாவது பாகத்தை தொடங்கினார்.
நேரடியாக நாடாளுமன்ற தேர்தலில் பங்கேற்காவிட்டாலும் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சிக்கும் அதன் தலைமையிலான பிரதமர் மோடியின் மத்திய அரசின் மீதும் எதிர்ப்பையும் கடை பிடித்து வருகிறார். இ ந் நிலையில் நேற்றைய பட்ஜெட் குறித்த தனது கருத்தினை சொல்லியிருக்கிறார். அதில் தேசிய ஜன நாயகக் கூட்டணி பட்ஜெட்டிற்கு தனது வாழ்த்துக்கள் என்றும் விரைவில் இந்தியாவின் பட்ஜெட்டை எதிர்பார்க்ககிறேன் என தனது பாணியில் சொல்லியிருக்கிறார்.