Connect with us

tech news

ChatGPT-யை சம்பவம் செய்யும் Llama 3.1

Published

on

Meta Logo

மெட்டா நிறுவனம் தனது ஓபன் சோர்ஸ் ஏஐ மாடல் பற்றி கடந்த சில மாதங்களாக தகவல் தெரிவித்து வந்தது. இந்த நிலையில், அந்நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஏஐ மாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது. மெட்டாவின் புதிய ஏஐ மாடல் Llama 3.1 என அழைக்கப்படுகிறது. இது அந்நிறுவனத்தின் முதல் ஏஐ மாடல் ஆகும்.

இதுவரை கிடைக்கும் ஏஐ மாடல்களில் மிகப்பெரிய ஓபன் சோர்ஸ் ஏஐ மாடல் இது என மெட்டா தெரிவித்து இருக்கிறது. புதிய Llama 3.1 ஏஐ மாடல் பரிசோதனைகளில் சாட்ஜிபிடி 4o-வை மற்றும் ஆந்த்ரோபிக்-இன் Claude 3.5 Sonnet உள்ளிட்டவைகளை பின்னுக்குத் தள்ளியதாக மெட்டா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

கடந்த ஆண்டு அறிமுகமான Llama 2 அதைவிட முந்தைய தலைமுறை மாடல்களுடன் ஒப்பிடப்பட்டது. தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் Llama 3.1 அதிநவீன ஏஐ மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்துகிறது.

லினக்ஸ் எப்படி இயங்குதளங்களை பின்னுக்கு தள்ளியதோ, ஓபன் சோர்ஸ் ஏஐ மாடல்களும் அதிநவீன வளர்ச்சியை நோக்கி பயணிக்கின்றன. இவை லினக்ஸ் போன்ற வெற்றியை பெறும் என்ற கணிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்தார்.

புதிய ஓபன் சோர்ஸ் ஏஐ மாடல்கள் முன்னணி கிளவுட் தளங்களான AES, Azure, Google, Oracle உள்ளிட்டவைகளில் கிடைக்கும். ஏற்கனவே சில பெரும் நிறுவனங்கள் Llama-வை கொண்டு பிரத்யேக ஏஐ மாடல்களுக்கு தங்களது சொந்த தரவுகளை கொண்டு பயிற்சியளிக்க தயாராகி வருகின்றன.

google news