Connect with us

tech news

₹ 75,000 கோடி இழப்பு.. $10 கொடுத்து Sorry கேட்கும் கிரவுட்ஸ்டிரைக் – என்ன ரங்கா இது?

Published

on

உலகம் முழுக்க சுமார் 85 லட்சம் விண்டோஸ் சாதனங்களை முடக்கியது. விமான சேவை, தொழில் நிறுவனங்கள் உள்ப பல்துறைகளில் சேவைகள் முடங்க கிரவுட்ஸ்டிரைக்-இன் அப்டேட் காரணமாக அமைந்தது. இதனால் 5.4 பில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 75000 கோடி இழப்பு ஏற்பட்டது.

மைக்ரோசாப்ட் சேவைகள் முடங்கியதை அடுத்து, பல்துறை பணிகள் ஸ்தம்பித்து போனது. இழப்பு மட்டுமின்றி, பயனர்கள், நிறுவனங்கள், பயணிகள் என பலரும் இதனால் பாதிப்புக்கு ஆளாகினர். பாதிப்பு சரியாக சில மணி நேரங்கள் ஆன நிலையில், கிரவுட்ஸ்டிரைக் தலைமை செயல் அதிகாரி, விண்டோஸ் சேவைகளில் ஏற்பட்ட இடையூறுக்கு மன்னிப்பு கோரி இருந்தார்.

இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் கிரவுட்ஸ்டிரைக் சார்பில் பயனர்களுக்கு மன்னிப்பு கோரி மின்னஞ்சல் அனுப்பப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பான மின்னஞ்சல்களில் பயனர்களுக்கு 10 டாலர்கள் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 835 அடங்கிய உபெர் ஈட்ஸ் கிஃப்ட் கார்டு ஒன்றும் இடம்பெற்று இருப்பதாக தெரிகிறது. பயனர்களிடம் மன்னிப்பு கேட்கும் விதமாக இந்த டோக்கன்கள் அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது.

மைக்ரோசாப்ட் சிஸ்டம்களில் கிரவுட்ஸ்டிரைக் வெளியிட்ட அப்டேட் புளூ ஸ்கிரீன் எரர்-ஐ ஏற்படுத்தியதால், பயனர்கள் கூடுதல் பணி மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதற்கு ஈடு செய்யும் வகையில், கிரவுட்ஸ்டிரைக் மன்னிப்பு கோரி மின்னஞ்சல் அனுப்புகிறது. இதனுடன் இணைக்கப்பட்ட உபெர் ஈட்ஸ் கிஃப்ட் கார்ட்-ஐ பயனர்கள் தங்களின் அடுத்த காஃபி, அல்லது இரவுநேர சிற்றுண்டிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இது ஒருபுறம் இருக்க, சில பயனர்கள் கிரவுட்ஸ்டிரைக் அனுப்பும் உபெர் ஈட்ஸ் கிஃப்ட் கார்டு வேலை செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கு பதில் அளித்த கிரவுட்ஸ்டிரைக் அதிகளவில் கிஃப்ட் கார்டுகள் பயன்படுத்தப்பட்டதால், உபெர் அவற்றை செயலிழக்க செய்ததாக தெரிவித்தது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *