Connect with us

Finance

தங்கம் தானா இது?…தரை லோக்கலா இறங்க ஆரம்பிச்சிட்டே விலை…

Published

on

Jewel

தங்க நகைகள் ஆடம்பரமாக சிலருக்கும், அத்தியாவசியமாக பலருக்கும், கைக்கு எட்டாக் கனியாக நிறைய பேருக்கும் இருந்து வருகிறது. தமிழ் நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கும் தங்க நகைகளுக்கும் இன்றும் பல விதமான தொடர்புகள் இருந்து தான் வருகிறது. ஒன்றோடு ஒன்று பின்னி பிணைப்பு கொண்டுள்ளவையாகத் தான் இருந்தே வருகிறது.

இதனாலேயே தங்கத்திற்கான மவுசு ஒரு போதும் குறைந்தது இல்லை. தேவைகளின் அதிகரிப்புமே அதன் மீது நடக்கும் வணிகத்தை தீர்மானித்து வருகிறது. தங்கத்தின் விற்பனை விலையில் நிலையான தன்மை அதிகம் இருந்துள்ளதாக வரலாற்றில கிடையாது.

அடிக்கடி மாற்றங்களை சந்தித்து வருவது தான் அதன் பழக்கம். இந்திய அரசு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த பிறகு தங்கதத்தின் விலை தொடர்ந்து இறங்கு முகத்திலேயே இருந்து வருவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Gold

Gold

தங்கத்தின் இறக்குமதி மீதான சுங்கவரிகுறைப்பை அடுத்து வீழ்ச்சியை நோக்கி சந்தித்து வருகிறது தொடர்ச்சியாக. சென்னையில் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று ரூபாய் பதினைந்து குறைந்து ஆராயிரத்து நானூற்றி பதினைந்து (ரூ.6415/-).

இதனால் ஒரு சவரனின் விலை ஐம்பத்தி ஓராயிரத்து முன்னூற்றி இருபது ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று இது நூற்றி இருபது ரூபாய் (ரூ.120/-)குறைவாகும். தொடர் ச்சியாக தங்கத்தின் விலை இப்படி குறைந்து வருவது நகை பிரியர்களுக்கு ஆனந்த்தையும், ஆச்சரியத்தையும் கொடுத்துள்ளது.

தங்கத்தின் தரை லோக்கலாக இறங்கி வந்தாலும், வெள்ளியின் விற்பனை விலையில் எந்த மாற்றமும் இன்று ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்றைப்போலவே இன்றும் அதே என்பத்தி ஒன்பது ரூபாயாகத்தான் இருக்கிறது. வெள்ளி கிலோ ஒன்றிற்கு என்பத்தி ஒன்பதாயிரமாக உள்ளது இன்று.

google news