Connect with us

latest news

தூக்கம் கண்களைத் தழுவட்டுமே…நேரம் குறித்து கொடுத்துள்ள விஞ்ஞானம்…

Published

on

Sleep

மனித வாழ்க்கை முன்பை போல இல்லமால் அதிகமான மாற்றங்களை சந்தித்து கொண்டே வருகிறது. வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும், வசதியான நிலையை அடையவும் உழைப்பு என்பது மிகப்பெரிய முதலீடாக இருந்து வருகிறது. உழைக்கும் விதமும் அதில் மேற்கொள்ளப்படும் சாதூயர்யங்களுமே அடுத்த, அடுத்த கட்டங்களை நோக்கி நகர வைக்கிறது.

உழைப்பையே உயிராக நினைத்து அதனால் உயர்வு கண்டவர் உலகில் ஏராளம். ஆனால் எத்தனை பெரிய திறமைசாலியாக இருந்தாலும், எவ்வளவு பெரிய உழைப்பாளியாக இருந்தாலும் அவர்களின் இன்றியமையாத் தேவையாக இருந்து வருவது தூக்கம். அசதி நீங்க, உற்சாகம் பெற, புத்துணர்வு கிடைக்க தூங்குவது அத்தியாவசியாமகவே இருப்பதைத் தான் மருத்துவ உலகும் வலியுறுத்துகிறது.

இப்படி மனித வாழ்க்கையில் ஆயுள் காலத்தை நிர்ணயிக்ககூடிய அளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பலரின் நினைவில் நிற்காத ஒன்றாகவும் இருந்து வருகிறது. அதிகம் தூங்கி பொழுதை கழித்தவர்கள் வாழ்வில் அடுத்த உயரிய நிலையை அடைவது எப்படி சிரமமோ, அதே போல தான் தேவையான அளவிலான உறக்கத்தை அனுபவிக்காதவர்களுமே என்பது உளவியல் சொல்லி வரும் உண்மை.

SLEEP

SLEEP

அமெரிக்கா நோய் தடுப்பு மையம் எந்தெந்த வயதுகாரர்கள் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதனை தெளிவுபடுத்தியுள்ளது. மூன்று மாதங்கள் வரையிலான குழந்தைகள் தினமும் 14 மணி நேரம் 17 மணி நேரமும், நான்கு வயது முதல் பன்னிரெண்டு மாதமுள்ளவர்கள் தினமும் 12 மணி நேரம் முதல் 16 மணி நேரமும், ஒன்று முதல் இரண்டு வயது வரை உள்ளவர்கள் 11 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை தூங்க வேண்டும் என்றும் சொல்ல்பட்டுள்ளது.

மூன்று வயது முதல் ஐந்து வயது வரை உள்ளவர்கள் தினசரி 10 மணி நேரம் முதல் 13 மணி நேரம் வரையிலும், ஆறு மணி முதல் பன்னிரெண்டு வயது வரை 9 முதல் 12 மணி நேரம் வரையும், பதிமூனு வயது முதல் பதினேழு வயது வரை உள்ளவர்கள் 8 முதல் 10 மணி நேரம் கட்டாயமாக உறங்க வேண்டுமாம்.

பதினெட்டு வயது முதல் அறுபது வயது வரை உள்ளவர்கள் குறைந்த பட்சம் 7 மணி நேரம் வரை தூங்கவது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றும் அறுபத்தி ஓரு வயது முதல் அறுபத்தி நான்கு வயது வரையிலானவர்கள் தினசரி 7 மணி நேரம் முதல் 9 மணி நேரம் வரை தூங்குவது சிறப்பாகும் என்றும் அதே போல அறுபத்தி ஐந்து வயதிற்கு மேற்பட்டவர்கள் தினமும் 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூங்குவது நன்மை தரும் என்பதையும் அமெரிக்க நோய் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *