Connect with us

Cricket

எனக்கு கேப்டன்சி கொடுங்கனு கேட்க முடியாது – பும்ரா

Published

on

இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்கு புதிய கேப்டன் மற்றும் தலைமை பயிற்சியாளர்கள் தங்களின் பணியை துவங்குகின்றனர். தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர், இந்திய டி20 அணி கேப்டனாக சூர்யகுமார் யாதவ் பொறுப்பேற்றுள்ளனர். இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படுவார் என கிரிக்கெட் வல்லுநர்கள், ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் அதிகம் எதிர்பார்த்தனர்.

எனினும், பலரது எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்திய டி20 அணி கேப்டனாக சூர்யகுமார் யாதவ் அறிவிக்கப்பட்டார். டி20 அணி கேப்டன் பதவியில் இருந்து ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டது பலருக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியதோடு, ஏராளமான கேள்விகளையும் எழுப்பியது. இந்த நிலையில், கேப்டன்சி விவகாரம் குறித்து இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

“நானாக சென்று, என்னை கேப்டனாக நியமனம் செய்யுங்கள் என்று கேட்க முடியாது. அந்த இடத்திலும் நான் இல்லை. பந்துவீச்சாளர்கள் புத்திசாலிகள். மைதானங்கள் சிறிதாகி வருகின்றன. கிரிக்கெட் மட்டைகள் (பேட்) சிறப்பாக மாறி வருகின்றன. பந்தை அதிக சிறப்பாக ஸ்விங் செய்வதற்கு தொழில்நுட்பம் வந்துள்ளதாக நான் எங்கும் காணவில்லை. மக்களும் சிக்சர் அடிக்கப்படுவதை ரசிக்கின்றனர்.”

“பந்துவீச்சாளர்கள் கடினமான பணியை மேற்கொள்கின்றனர். அவர்கள் பேட்-இன் பின்னால் மறைந்து கொள்வதில்லை. போட்டியில் தோல்வியை சந்தித்தால், பந்துவீச்சாளர்கள் தான் குற்றம்சாட்டப்படுகின்றனர். இது மிகவும் கடினமான பணி. அந்த பணியை மேற்கொள்வதில் நான் அதிக பெருமை கொள்கிறேன். நீங்கள் அதிக சவால்களை எதிர்கொள்ள வேண்டும். சவால்களை எதிர்கொள்ளும் போதுதான், பந்துவீச்சாளர்கள் புதிய வழிகளை கண்டறிந்து வெற்றி காண்கின்றனர்,” என்றார்.

google news