latest news
குவிந்த கூட்டம்…குளிக்க முடியாதோ?…குற்றாலம் இன்று…
தென் மேற்கு பருவ மழையின் தீவிரத்தை தமிழகத்தின் பல்வேறு இடங்கள் உணர்ந்தது. நீலகிரியில் அடித்து துவைத்து எடுத்தது பேய் மழை. இயல்பு வாழ்க்கையில் ஏற்பட்டது பாதிப்பு. கேரளாவிலும் மழை பொழிவு இருந்தது. சென்னை வானிலை ஆய்வு மையம் தென் தமிழக மலைப்பகுதிகளில் மழைப்பொழிவு இருக்கும் என கணித்திருந்தது. அதே போல மழை பெய்தது.
தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தளங்களில் சீசன் நேரத்தில் முன்னுக்கு நிற்பது குற்றாலமுமே. குற்றால மலைப்பகுதிகளில் பெய்த மழையால் அனைத்துஅருவிகளிலும் தண்ணீர் வரத்து நன்றாகவே இருந்து வருகிறது. சீசன் துவக்க நேரத்தில் கண்ணாமூச்சி காட்டி வந்த நிலவரம் பின் நாட்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு சாதகமாக அமைந்தது. பிரதான அருவிகளில் அனைத்திலும் குற்றாலத்தின் குளுமையை அனுபவிக்க நாள் தவறாது வருகை தந்தனர் பொழுதுபோக்கு பிரியர்கள்.
ஆடி மாதம் துவங்கியதிலிருந்து தமிழகம் முழுவதும் காற்றின் வேகத்தில் இருக்கும் தீவிரம் தொடர்ந்து கொண்டே வருகிறது. இதே போல தான் குற்றாலத்திலும் இன்று குளுமையான காற்று வீசி வருகிறது. காலை பதினோரு மணி நிலவரப்படி
காற்றின் வேகத்தில் உடலை நனைக்கும் சிலு சிலு சாரலால் மனதை வருடும் சூழலே இருந்தது. காற்று, சாரல், தண்ணீர் என அனைத்திலும் இன்று நிறைவை காட்டியிருந்தாலும், விடுமுறை தினம் என்பதால் காலை பதினோரு மணி நிலவரப்படி கூட்டம் குவிந்திருந்தது. இதனால் அதிக நேரம் குளிக்க முடியுமா? என்பதுவே குற்றாலத்தின் இன்றைய நிலை, காரணம் விதிக்கப்ப்பட்டுள்ள தடை, அனைத்து அருவிகளிலும் அபாய கட்டத்தை தாண்டி விழுந்த தண்ணீரால் பாதுகாப்பை மனதில் கொண்டு தடையானது விதிக்கப்பட்டுள்ளது.