Connect with us

tech news

நத்திங் போன் அம்சங்கள்- லீக் ஆன தகவல்

Published

on

நத்திங் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன் சில தினங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. நத்திங் போன் 2a பிளஸ் என்ற பெயரில் இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் மற்றும் தகவல்கள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், நத்திங் போன் 2a பிளஸ் முழு அம்சங்களும் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. ஸ்மார்ட்ப்ரிக்ஸ் மூலம் இந்த விவரங்கள் லீக் ஆகி உள்ளது. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போன் அதன் ஸ்டாண்டர்டு எடிஷன் உடன் ஒப்பிடும் போது மூன்று குறிப்பிடத்தக்க ஹார்டுவேர் மாற்றங்களை கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.

நத்திங் போன் 2a பிளஸ் மாடலில் 50MP செல்பி கேமரா வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. நத்திங் போன் 2a மாடலில் 32MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. பின்புறம் இரட்டை கேமரா அமைப்பில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படதாது என தெரிகிறது.

பேட்டரியை பொருத்தவரை நத்திங் போன் 2a பிளஸ் மாடலிலும் 5000mAh பேட்டரி வழங்கப்படும் என்றும் சார்ஜிங்கில் மட்டும் 50W வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதன் ஸ்டாண்டர்டு மாடலில் 45W சார்ஜிங் வசதி உள்ளது. டிஸ்ப்ளே அளவை பொருத்தவரை நத்திங் போன் 2a பிளஸ் 6.7 இன்ச் AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக நத்திங் 2a பிளஸ் ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 7350 சிபிசெட், அதிகபட்சம் 12GB ரேம் வழங்கப்படும் என்றும் பிளாக் மற்றும் கிரெ என இருவித நிறங்களில் கிடைக்கும் என்பதை நத்திங் நிறுவனம் உறுதிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

google news